இன்றுடன் நிறைவு




அரச பாடசாலைகள் மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளின் 2022 ஆம் ஆண்டுக்கான முதலாம் தவணை கல்வி நடவடிக்கைகள் இன்றுடன்  நிறைவடைவதாக   கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

இதன்படி பாடசாலைகளின் இரண்டாவது தவணை எதிர்வரும் 13 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது

இதேவேளை நாட்டின் கல்வி முறையில் எதிர்காலத்தில், நேர்மறையான நடவடிக்கைகளின் அவசியம் தொடரபில் கல்வி அமைச்சு வலியுறுத்தியுள்ளது

தரம் 5 புலமைப்பரிசில் மதிப்பெண்களின் அடிப்படையில்  ஆரம்பிக்கப்படும் எந்தவொரு பாடசாலையிலும் இடைநிலை  வகுப்புகளுக்கு மாணவர்களை இணைத்துக் கொள்ளும்   நடவடிக்கையினை நிறுத்துவதற்கு எதிர்ப்பார்த்துள்ளதாக கல்வி அமைச்சர்  சுசில் பிரேமஜயந்த  தெரிவித்துள்ளார்

இதேவேளை இந்த வருடம் பாடப்புத்தகங்களை அச்சிடுவதற்கான செலவு கடந்த வருடங்களை விட   நான்கு மடங்கு அதிகரித்துள்ளதாகவும்   கல்வி அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்