"மருத்துவத்துறை விஞ்ஞானியாக வரவேண்டும் என்பதே எனது இலட்சியம்"



 


மருத்துவத்துறை விஞ்ஞானியாக வரவேண்டும் என்பதே எனது இலட்சியம்.


அகில இலங்கை ரீதியில் உயிரியல் துறையில் முதலிடம் பெற்ற மாணவன் துவாரகேஷ் கூறுகிறார்.

சர்வதேச பல்கலைக்கழகத்தில் பயின்று பல ஆராய்ச்சிகள் செய்து மருத்துவத்துறை விஞ்ஞானியாக வரவேண்டும் என்பது எனது இலட்சியம்.

 என்று அகில இலங்கை ரீதியில் உயிரியல் துறையில் முதலாம் இடம் பெற்ற மாணவன் தமிழ்வண்ணன் துவாரகேஷ் தெரிவித்தார்.

 இவ்வாரம் வெளியான 2021 உயர்தர பரீட்சை முடிவுகளின் படி அகில இலங்கை ரீதியில் உயிரியல் துறையில் முதலிடம் பெற்று சாதனை படைத்த காரைதீவிவைச் சேர்ந்த மாணவன் தமிழ்வண்ணன் துவாரகேஷ் அவர்களின் செவ்வி இது.


கிழக்கு மாகாண வரலாற்றில் அகில இலங்கை ரீதியில் கிழக்கு மாணவன் ஒருவன் முதலிடம் பெற்றது இதுவே முதல் தடவை .

அதுவும், முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்தர் பிறந்த மண்ணில் தோன்றிய துவாரகேஷ் மட்டக்களப்பு புனிதமிக்கேல் கல்லூரியில் பயின்று இந்த சாதனையை பதிவு செய்திருக்கிறார் .

அவரது தந்தையார் தோல் வைத்திய நிபுணர் தமிழ்வண்ணன் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் பணியாற்றுகிறார். அவரது தாயார் பகீரதி வைத்திய அதிகாரி அவரும் அங்கு பணியாற்றுகின்றார்.

 இவருக்கு இரண்டு சகோதரிகள் .ஒருவர் உயர்தரம் பயில்கின்றார்.மற்றயவர் தரம் பத்தில் பயில்கிறார். இருவரும் மட்டக்களப்பு சிசிலியா மகளிர் கல்லூரியில் பயில்கின்றனர்.
 காரைதீவில் பிறந்து மண்டூரில் கரம்பிடித்த
 பண்டிதர் நல்லரத்தினம் அவர்களின் பேரன் துவாரகேஷ் ஆவார் .

அவர்கள் தற்போது மட்டக்களப்பிலே வாழ்ந்து வருகின்றார்கள்.

 கிழக்கு மாகாண வரலாற்றில் முதல் தடவையாக அகில இலங்கை ரீதியில் முதலிடம் பெற்ற மாணவன் தமிழ்வண்ணன் துவாரகேஷ் அவர்களை பேட்டி கண்ட பொழுது அவர் கூறுகையில்..

கேள்வி. அகில இலங்கை ரீதியில் நீங்கள் முதலிடம் வருவீர்கள் என்று எதிர்பார்த்திருந்தீர்களா?
பதில். தேசிய மட்டத்தில் வருவேன் என்று தெரியும். இருந்தாலும் அகில இலங்கை ரீதியில் முதலிடம் என்பது நான் எதிர்பார்க்கவில்லை. முதன் முதலில் பரீட்சை முடிவை பார்த்தவுடன் மிகவும் சந்தோஷமாகவும் இருந்தது. அதிர்ச்சியாகவும் இருந்தது. எடுத்தவுடன் அம்மாவிடம் கூறினேன்.
 

கேள்வி. தங்களின் ஆரம்பக்கல்வி பற்றி கூறுங்கள்..