ஒளி விழா நிகழ்வுகள்




 வி.சுகிர்தகுமார் 

  நத்தார் கொண்டாட்டத்தினை முன்னிட்டதாக ஒளி விழா நிகழ்வுகள் பல்வேறு இடங்களிலும் சிறப்பாக அம்பாரை மாவட்டத்தில் இடம்பெற்று வருகின்றது.

இதற்கமைவாக  அக்கரைப்பற்று ஸ்ரீ இராமகிருஷ்ணா தேசிய பாடசாலை மண்டபத்தில் அதிபர் ஜே.ஆர். டேவிட் அமிர்தலிங்கம் தலைமையில் இன்று மிகச் சிறப்பாக நடைபெற்றது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக அக்கரைப்பற்று அன்னை ஆரோக்கியமாதா தேவாலயத்தின் அருட்தந்தை ஜெரிஸ்டன் வின்சன்ட் கலந்து கொண்டதுடன் விசேட அதிதிகளாக அக்கரைப்பற்று அசெம்பிளி ஒப் கோட் திருச்சபையின் போதகர் ரவிகரன் மற்றும் சின்னமுகத்துவாரம மெதடிஸ்த திருசசபையின் அருட்சகோதரி மரிஸ்ரெலா, அக்கரைப்பற்று கார்மேல் கன்னியர் மடத்தின் அருட்சகோதரி டொனேட்டா உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டதுடன் பாடசாலையின் ஆசிரியர்கள் மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

நிகழ்விற்கு வருகை தந்த அதிதிளை பாடசாலையின் வான்ட் வாத்திய குழுவினரின் இசையோடு ஏற்பாட்டாளர்கள் வரவேற்றனர்.

தொடர்ந்து பாடசாலை ஒன்று கூடல் மண்டபத்தில்
ஒளி விழாவினை சிறப்பிக்கும் முகமாக உரைகளும் அருட் தந்தை மற்றும் அருட் சகோதரிகளால் வழங்கப்பட்டதுடன் கிறிஸ்துவின் பிறப்பின் நோக்கம் கிறிஸ்மஸ் கொண்டாடங்கள் பற்றிய விளக்கங்கள் ஏனைய மதத்தவர் பலருக்கு இன்னும் தெரியாமல் இருக்கலாம். ஆகவே ஒவ்வொரு கிறிஸ்தவரும் கிறிஸ்துவின்  வருகை பற்றிய செய்திகளை மற்றவர்களோடு பகிர்ந்து கொள்ள வேண்டும் எனவும் அனைத்து இன மக்களோடும் ஒற்றுமையாக வாழ வேண்டும் கேட்டுக் கொண்டனர்.

இதனிடையே பல்வேறுபட்ட கலை நிகழ்வுகள் இங்கு அரங்கேற்றப்பட்டதுடன் நத்தார் தாத்தா பிள்ளைகளோடு சேர்ந்து நடமாடி அனைவரையும் மகிழ்வித்தார்.

இதேநேரம் ஒளிவிழாவை முன்னிட்டு இடம்பெற்ற பல்வேறு போட்டி நிகழ்வுகளில் பங்கேற்று வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டது.