நுரைச்சோலை வீட்டுத்திட்டத்தை மக்களுக்கு பகிர்ந்தளிப்பதில் நியாயம் நிலைநாட்டப்பட வேண்டும்




 மாளிகைக்காடு நிருபர்


சவுதி அரேபிய அரசாங்கத்தின் நிதி உதவியின் கீழ் அக்கரைப்பற்று பிரதேச நுரைச்சோலையில் சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக நிர்மாணிக்கப்பட்டுள்ள வீட்டுத்திட்டத்தை தேவையுடைய மக்களுக்கு பகிர்ந்தளிப்பதில் உள்ள இழுபறியில் உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பை ஏற்று தேசிய இன விகிதாசாரப்படி அந்த வீட்டுத் திட்டத்தை கையளிக்க வேண்டும் என எழுத்தில் கோரிக்கை முன்வைக்கப்பட்டது. அந்த கோரிக்கையை ஏற்க முடியாது என இன்றைய அம்பாறை மாவட்ட அபிவிருத்திக்குழு கூட்டத்தில் வாதபிரதிவாதங்கள் எழுந்தது.

அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எம்.ஏ. டக்ளஸ் அவர்களின் நெறிப்படுத்தலில் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் மற்றும் அம்பாறை மாவட்ட அபிவிருத்திக்குழு தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான டவலியு.டி. வீரசிங்க ஆகியோரின் இணைத்தலைமையில் பாராளுமன்ற உறுப்பினர்கள், திணைக்கள தலைவர்கள், அரச உயரதிகாரிகளின் பங்குபற்றலுடன் அம்பாறை மாவட்ட செயலகத்தில் (12) நடைபெற்ற அம்பாறை மாவட்ட அபிவிருத்திக்குழு கூட்டத்தில் நுரைச்சோலை பிரதேசத்தில் சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக நிர்மாணிக்கப்பட்டுள்ள வீட்டுத்திட்டத்தை நாட்டின் தேசிய இன விகிதாசாரப்படி வழங்க முன்வர வேண்டும் என்றும் அதுவே உச்சநீதிமன்ற தீர்ப்பாக உள்ளதாகவும் அந்த கூட்டத்தில் எழுத்து மூல கோரிக்கை முன்வைக்கப்பட்டு அந்த கோரிக்கைக்கு ஆதரவாக கருத்துக்கள் முன்வைக்கப்பட்டது.


இலங்கை நட்புறவுக்கும் ஆபத்து ஏட்படும் நிலை உருவாகியுள்ளது. இந்த வீட்டுத்திட்ட விடயம் தொடர்பில் சவூதி மன்னர் அதிருப்தியில் உள்ளதாக இலங்கைக்கான சவூதி தூதுவர் எங்களிடம் பலமுறை கூறியுள்ளார். இந்த வீட்டுத்திட்டங்களை  மனிதாபிமானமே இல்லாமல் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்காமல் எங்கோ இருக்கும் சம்பந்தமே இல்லாத மக்களுக்கு வீடுகளை கையளிக்க முனைவது ஏற்றுக்கொள்ள முடியென்றும் வாதிட்டார்.