திடீர் சோதனை




 


நூருல் ஹுதா உமர்


நிந்தவூர் சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் கே.எல்.எம். றயீஸ் அவர்களின் வழிகாட்டலில் நிந்தவூர் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பிரிவில் உள்ள வர்த்தக நிலையங்கள், பழக்கடைகள், சில்லறைக்கடைகள், ஹோட்டல், வெற்றுக் காணிகள், அனைத்திலும் திடீர் சோதனைகள் இன்று இடம்பெற்றது.

இந்தகளச்சோதனையின் போது ஒவ்வொரு கர்ப்பிணித்தாய்க்கும் போசாக்குமிக்க உணவுகளை பெற்றுக் கொள்வதற்காக ரூபா 45000/- பெறுமதியான கொடுப்பனவைப் பெற்றுக் கொடுக்கும் நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் கொள்வனவு செய்ய அனுமதியளிக்கப்பட்ட வியாபார நிலையங்களில் அரிசி, பருப்பு, கச்சான்(தோல் நீக்கியது), ரின் மீன், கடலை, சோயா, முட்டை, பாசிப்பயறு, நெத்தலிக்கருவாடு என்பன உள்ளதா என்றும், அவற்றின் தரம், இவை தவிந்த ஏனைய பொருட்கள் விற்கப்படக்கூடாது என்று கடை உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு அவ்வாறு அவற்றை மீறுகின்ற கடைகளிட்கும், தாய்மார்களிற்கும் எதிராக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் தெளிவுபடுத்தப்பட்டது.

நிந்தவூர் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பிரிவுக்குட்பட்ட வியாபார நிலையங்கள், ஹோட்டல்கள் மற்றும் பழக்கடைகளின் தரத்தைப்பேணும் வகையிலும் நிந்தவூர் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தினால் அனைத்து இடங்களிலும் சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.  இதில் மக்களின் நுகர்வுக்கு பொருத்தமற்ற உணவுகள், பழங்கள் மற்றும் செயற்கையாக பழங்களை பழுக்கவைப்பதற்காக பயன்படுத்தகூடிய இரசாயனங்கள், இரசாயனம் தெளிப்பதற்கு பயன்படுத்தக்கூடிய கருவிகள் அனைத்தும் கைப்பற்றப்பட்டு அழிக்கப்பட்டன.

இப்பரிசோதனை நடவடிக்கையில் நிந்தவூர் சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர்கே.எல்.எம் றயீஸ், மேற்பார்வை பொது சுகாதாரப் பரிசோதகர், பொது சுகாதாரப் பரிசோதகர்கள், மற்றும் அலுவலக ஊழியர்களும் கலந்து கொண்டனர்.