கடமையேற்பு





மாவடிப்பள்ளி அஸ்ரப் வித்தியாலய புதிய அதிபராக ஸம்ஸம் மற்றும் எம்.எஸ். காரியப்பர் வித்தியாலய நிரந்தர அதிபராக ஆரிப் ஆகியோர் பொறுப்பேற்றனர். !!

நூருல் ஹுதா உமர் 

கல்முனை கல்வி வலய மாவடிப்பள்ளி கமு/கமு/ அல்- அஸ்ரப் மகா வித்தியாலய அதிபராக முன்னாள் கல்முனை கோட்டக்கல்வி அதிகாரியான அதிபர் தரம் ஒன்றை சேர்ந்த வீ.எம். ஸம்ஸம் இன்று பொறுப்பேற்றார் அப்பாடசாலையின் தற்காலிய அதிபராக பதவிவகித்த ஏ.எல்.ரஜாப்தீன் புதிய அதிபரிடம் பாடசாலையின் பொறுப்புக்களை கையளித்தார். 

காரைதீவு கோட்டக்கல்வி அதிகாரி ஜே. டேவிட் முன்னிலையில் தமது பொறுப்புக்களை கையேற்ற புதிய அதிபர் தாம் இந்த பாடசாலையை மேலும் கல்வி ரீதியாகவும், ஏனைய இணைப்பாடவிதான ரீதியாகவும் முன்னேற்ற முழுமையாக பணியாற்ற தயாராக உள்ளதாக தெரிவித்தார். தான் பொறுப்பேற்று குறுகிய காலத்தில் பாடசாலையை சிறப்பாக வழிநடத்திய ஏ.எல்.ரஜாப்தீனின் நிர்வாக ஆளுமையை பிரதிக்கல்வி பணிப்பாளர் ஜிஹானா ஆலிப் பாராட்டி அவரது சேவை மிகவிரைவில் இன்னுமொரு பாடசாலைகக்கு நிரந்தரமாக கிடைக்கவேண்டும் என்று வாழ்த்துரைத்தார். 

இந்நிகழ்வில் கல்முனை வலயக்கல்வி அலுவலக பிரதிக்கல்வி பணிப்பாளர்களான எம்.எச்.றியாஸா, பீ. ஜிஹானா ஆலிப், உதவிக்கல்வி பணிப்பாளர் ஏ. அஸ்மா மலிக், காரைதீவு கோட்டக்கல்வி அதிகாரி ஜே. டேவிட், கமு/கமு/ அல்- ஹுசைன் வித்தியாலய அதிபர் ஏ.எல்.எம்.ஏ. நளீர், கிழக்கு மாகாண ICT பேரவை பணிப்பாளர் யூ.எல்.என். ஹுதா உமர், ஆசிரிய ஆலோசகர்கள், ஆசிரியர்கள், விளையாட்டு பயிற்றுவிப்பாளர் எனப்பலரும் கலந்து கொண்டனர்.

மேலும், கல்முனை கல்வி வலய சாய்ந்தமருது எம்.எஸ். காரியப்பர் வித்தியாலய அதிபராக அப்பாடசாலையின் தற்காலிய அதிபராக கடமையாற்றி வந்த எம்.எஸ்.எம். ஆரிப் நிரந்தர அதிபராக இன்று உதவிக்கல்வி பணிப்பாளரும், சாய்ந்தமருது கோட்டக்கல்வி அதிகாரியுமான என்.எம்.ஏ. மலிக் முன்னிலையில் பொறுப்பேற்று கொண்டார்.  இந்நிகழ்வில் அப்பாடசாலையின் ஸ்தாபக அதிபர் ஏ.எல்.எம். நாவித், கிழக்கு மாகாண ICT பேரவை பணிப்பாளர் யூ.எல்.என். ஹுதா உமர், பாடசாலை ஆசிரியர்கள், விளையாட்டு பயிற்றுவிப்பாளர், கல்விசாரா உத்தியோகத்தர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.