தமிழ் மொழித் தினம்




 


வி.சுகிர்தகுமார் 0777113659 


 திருக்கோவில் கல்வி வலயத்தினால் நடாத்தப்பட்ட 2023ஆம் ஆண்டிற்கான அகில இலங்கை தமிழ்மொழிதினம் நிகழ்வுகள் அக்கரைப்பற்று ஸ்ரீ இராமகிருஸ்ண தேசிய பாடசாலையில் இன்று (22) நடைபெற்றது.
திருக்கோவில் வலயக்கல்விப்பணிப்பாளர் இரா உதயகுமார் தலைமையில் கல்வி அபிவிருத்திக்கான பிரதிக்கல்விப்பணிப்பாளரும் விழாக்குழுவின் தலைவருமான கே.கமலமோகனதாசன் ஒருங்கிணைப்பில் இடம்பெற்ற நிகழ்வுகளில் ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் வி.பபாகரன் பிரதிக்கல்விப்பணிப்பாளர்களான எஸ்.சுரநுதன் கே.கங்காதரன் எம்.எஸ்.நபீஸ் முகமட் பனங்காடு பிரதேச வைத்தியசாலையின் வைத்தியர் திருமதி குணாளினி சிவராஜ் மற்றும் தேசிய பாடசாலையின் அதிபர் டேவிட் அமிர்தலிங்கம் உள்ளிட்ட கோட்டக்கல்விப்பணிப்பாளர்கள் ஆசிரிய ஆலோசகர்கள் அதிபர்கள் ஆசிரியர்கள் சமூக பெரியார்கள் ஓய்வு நிலை கல்விமான்கள் என பலர் கலந்து கொண்டனர்.
அக்கரைப்பற்று ஸ்ரீ வம்மியடிப்பிள்ளையார் ஆலயத்தில் சிவஸ்ரீ ப.கேதீஸ்வரக்குருக்கள் நடாத்தி வைத்த பூஜை வழிபாடுகளின் பின்னர் அங்கிருந்து ஆரம்பமான ஊர்வலத்தில் தமிழிற்கும் சைவத்திற்கும் அரும்பணியாற்றிய சுவாமி வி;புலாநந்தர் மற்றும் தமிழ் தாயின் திருவுருவப்படங்களை தாங்கிய பல்லக்கு மாணவர்களால் சுமந்து செல்லப்பட்டது.
இவ்வூர்வலத்தில் கல்வி அதிகாரிகள் கல்விமான்கள் மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
ஊர்வலமானது பாடசாலையின் வளாகத்தை அடைந்ததும் அங்கு தேசிய கொடி மற்றும் வலயக்கொடி பாடசாலை கொடி என்பன ஏற்றி வைக்கப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டது.
தொடர்ந்து சுவாமி வி;புலாநந்தர் மற்றும் தமிழ் தாயின் திருவுருவப்படங்கள் நிகழ்வு நடைபெறும் மண்டபத்தினுள் கல்வி அதிகாரிகளினால் எடுத்துச் செல்லப்பட்டு வைக்கப்பட்டதுடன் புஸ்பாஞ்சலியும் செலுத்தப்பட்டது.
அங்கு சமய அனுஸ்டானம் தமிழ் மொழி வாழ்த்து தமிழத்தாய் வாழ்த்து தமிழ் மொழிதின வாழ்த்து என்பன இடம்பெற்றதுடன் மாணவர்களின் கலை நிகழ்வுகளும் அரங்கேற்றப்பட்டன.
இதன் பின்னராக வரவேற்பு மற்றும் தலைமை உரைகள் இடம்பெற்றதுடன் முன்னராக நடைபெற்ற போட்டி நிகழ்வுகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கான சான்றிதழ்களும் அதிதிகளினால் வழங்கி வைக்கப்பட்டதுடன் ஏனைய போட்டி நிகழ்வுகளும் ஆரம்பித்து வைக்கப்பட்டன