இந்தியாவின் மணிப்பூர் உரிமைப் போராட்டத்தை அடுத்து வெடிக்கும் #ஹரியானா வண்முறை.
=====================================
பா.ஜ.க ஆளும் மணிப்பூரில் ஏற்கெனவே பழங்குடியல்லாத மற்றும் பழங்குடி சமூகத்துக்கிடையே மூன்று மாதங்களாக வன்முறை நடந்துகொண்டிருக்கும் நிலையில் தற்போது பா.ஜ.க ஆளும் இன்னொரு மாநிலமான ஹரியானாவில் மேவாத் மாவட்டத்தில் உள்ள நூஹ் பகுதியில் கடந்த திங்கட்கிழமை கலவரம் வெடித்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பா.ஜ.க மாவட்டத் தலைவர் கார்கி கக்கார் என்பவரால் தொடங்கிவைக்கப்பட்ட #விஷ்வ இந்து பரிஷத் அமைப்பின் பேரணியில் திடீரென இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் இதுவரைக்கும் ஆறு பேர் கொல்லப்பட்துடன் பலர் காயமடைந்துள்ளனர். மேலும் ஏராளமான கடைகள், வாகனங்கள், மசூதிக்கும் தீவைக்கப்பட்டுள்ளதுடன்
இதுவரைக்கும் 176பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தற்போது நிலமை கட்டுக்குள் உள்ளதாகவும் மேவாத் பகுதியில் துணை ராணுவம் மற்றும் ஐ.ஆர்.பி.யின் நிரந்திர பட்டாலியனும் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் ஹரியானா துணை முதலமைச்சர் துஷ்யந்த் சௌதாலா தெரிவித்துள்ளார்.
தகவல்
As sheikh Hafeesul haq Fathih institute for Higher Education)


Post a Comment
Post a Comment