அமெரிக்க படைகளும் தயாராவது ஏன்?




 



மோட்டார் பொருத்தப்பட்ட பாராகிளைடர்கள் மூலம் ஊடுருவும் ஹமாஸின் உத்தி வட கொரியாவுக்குச் சொந்தமானதாக இருக்கலாம் என்றும் அந்த அதிகாரி கூறினார்.



தங்களிடம் பணயக் கைதியாக உள்ள ஒரு பெண்ணின் காணொளியை ஹமாஸின் ஆயுதப் பிரிவான அல்-காஸம் பிரிகேட்ஸ் வெளியிட்டுள்ளது


தங்களிடம் பணயக் கைதியாக உள்ள ஒரு பெண்ணின் காணொளியை ஹமாஸின் ஆயுதப் பிரிவான அல்-காஸம் பிரிகேட்ஸ் வெளியிட்டுள்ளது.


அக்டோபர் 7ஆம் தேதி இஸ்ரேல் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்திய பிறகு ஹமாஸ் வெளியிட்ட முதல் பணயக்கைதி வீடியோ இதுவாகும். காஸாவில் 199 பேர் சிறைபிடிக்கப்பட்டுள்ளதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.


வீடியோவில், ஒரு இளம் பெண் தனது பெயர் மாயா ஷெம் என்றும், தனக்கு 21 வயது என்றும், இஸ்ரேலில் உள்ள ஷோஹாம் நகரைச் சேர்ந்தவர் என்றும் கூறுகிறார்.


இஸ்ரேலில் நடந்த ஒரு விருந்தில் ஹமாஸால் பிணைக் கைதியாகப் பிடிக்கப்பட்டதாகக் கூறி, தன்னை விடுவிக்குமாறு அவர் கெஞ்சும் காட்சி அந்த வீடியோவில் இடம்பெற்றுள்ளது.


அதே பெண் கையில் காயம் ஏற்பட்டு சிகிச்சை பெறும் காட்சியும் இதில் அடங்கும்.


ஹமாஸால் மாயா கடத்தப்பட்டதை உறுதிப்படுத்திய இஸ்ரேல் பாதுகாப்புப் படை அவரது குடும்பத்தினருடன் தொடர்பில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.


பிபிசி பொதுவாக பணயக் கைதிகள் வீடியோக்களை வெளியிடுவதில்லை.


வீடியோவில் இருந்து படங்களை காட்டலாம் என்று அவர்கள் ஒப்புக்கொண்டதாக குடும்பத்தின் செய்தித் தொடர்பாளர் கூறினார்.