செயலமர்வு





 நூருல் ஹுதா உமர் 


சர்வதேச வறுமை ஒழிப்பு வாரத்தை முன்னிட்டு சாய்ந்தமருது பிரதேச செயலகத்திற்குட்பட்ட கர்ப்பிணித்தாய்மார்களுக்கு போஷாக்கு மற்றும் ஆரோக்கிய உணவு பழக்கம் பற்றிய விழிப்புணர்வு செயலமர்வு இன்று (17) சமுர்த்தி வங்கிச் சங்க கூட்ட மண்டபத்தில் இடம்பெற்றது.

இந்நிகழ்வு பிரதேச செயலாளர் எம்.எம்.ஆசிக், தலைமைப்பீட சமுர்த்தி முகாமையாளர் ஏ.சீ.ஏ. நஜீம் ஆகியோரின் வழிகாட்டலில் சமுர்த்தி சமூக அபிவிருத்தி உதவியாளர் யூ.எல்.ஜஃபர் ஒருங்கிணைப்பில் சாய்ந்தமருது பிரதேச செயலக சமுர்த்தி வங்கிச் சங்க சமூக அபிவிருத்தி பிரிவின் ஏற்பாட்டில் வங்கிச் சங்க முகாமைத்துவ பணிப்பாளர் றியாத் ஏ.மஜீத் தலைமையில் இடம்பெற்றது.

இதில் வளவாளர்களாக காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரியும், சாய்ந்தமருது பதில் சுகாதார வைத்திய அதிகாரியுமான டாக்டர் தஸ்லிமா பஷீர், கல்முனை சுகாதார சேவைகள் பணிமனை டாக்டர் எம்.என். எம். தில்சாத் கலந்து கொண்டு விரிவுரையாற்றினர்.

இந்நிகழ்வில் சமுர்த்தி கருத்திட்ட முகாமையாளர் எஸ்.றியாபா, சாய்ந்தமருது பிரதேச செயலக சமுர்த்தி சமுதாய அடிப்படை அமைப்பு விடய அபிவிருத்தி உத்தியோகத்தர் ஏ.எப்.றிகாஸா ஷர்பீன் உள்ளிட்ட சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், பயனாளிகள் என பலரும் கலந்து கொண்டனர்.

சர்வதேச வறுமை ஒழிப்பு வாரம் இம்மாதம் 17-23 வரை சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களம் தேசிய ரீதியில் அமுல்படுத்தியதை அடுத்து பிரதேச செயலக சமுர்த்தி வங்கிச் சங்க சமூக அபிவிருத்தி பிரிவினால் பல்வேறு வேலைத்திட்டங்கள் இன்றிலிருந்து நடைமுறைப்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.