சிறைப்பிடிக்கப்பட்ட இஸ்ரேல் வீராங்கனைகள்



 


காஸா எல்லையில் ஹமாஸ் அமைப்பைச் சேர்ந்தவர்கள் இஸ்ரேல் பாதுகாப்புப் படை வீராங்கனைகளை பிணையக் கைதிகளாக சிறைப்பிடித்து வைத்துள்ள வீடியோவை வெளியிட்டுள்ளனர். 


குறித்த வீடியோவில் இடத்தின் பெயர் குறிப்பிடப்படவில்லை. இஸ்ரேல் பாதுகாப்புப் படை வீராங்கனைகள் மட்டுமின்றி, பெண்கள், குழந்தைகள், மூதாட்டிகளும் உள்ளனர். 


குண்டு மழை பொழிய அதிரும் கட்டட அறையில், அவர்கள் அஞ்சி நடுங்கும் வீடியோ இணையத்தில் பலரால் பகிரப்பட்டு வருகிறது