இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் 16வது பட்டமளிப்பு விழா





(எஸ்.அஷ்ரப்கான்)

இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் 16வது பட்டமளிப்பு விழா எதிர்வரும் பெப்ரவரி 10 மற்றும் 11 ஆகிய தினங்களில் பல்கலைக்கழக ஒலுவில் வளாகத்தில் நடைபெற ஏற்பாடாகி உள்ளது.

இது தொடர்பாக விளக்கமளிக்கும் ஊடக மாநாடு இன்று (06)  பல்கலைகழக பிரதான சபை மண்டபத்தில் இடம்பெற்றது. 

பெப்ரவரி 10ஆம் தேதி 3 அமர்வுகளும் 11ஆம் தேதி 3 அமர்வுகளுமாக மொத்தமாக ஆறு அமர்வுகளாக பட்டமளிப்பு விழாவை நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

முதலாம் நாளின் முதலாவது அமர்வில் கலை கலாசார பீடத்தைச் சேர்ந்த 342 பட்டதாரிகளும் இரண்டாவது அமர்வில் இஸ்லாமிய கற்கைகள் அரபு மொழி பீடத்தைச் சேர்ந்த 355 பட்டதாரிகளும் மூண்றாவது அமர்வில் பிரயோக விஞ்ஞான பீடம், பொறியியல் பீடம் மற்றும் தொழில்நுட்ப பீடம் ஆகியவற்றைச் சேர்ந்த 430 பட்டதாரிகளும் பட்டம் பெற உள்ளனர்.

 இணையத்தள பக்கமும் பத்திரிகையாளர் மாநாட்டின் போது அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.


ஊடக நிழ்வில் உபேவேந்தர் பேராசிரியர் ரமீஸ் அபூபக்கருடன் இணைந்து பட்டமளிப்விழாக் குழு தலைவர் பேராசிரியர் எம்.பி.எம் இஸ்மாயில், பதில் பதிவாளர் எம்.ஐ.எம். நௌபர், ஊடக பிரிவு இணைப்பாளர் சிரேஷ்ட விரிவுரையாளர் எப்.எச்.ஏ. ஷிப்லி மற்றும் உறுப்பினர்கள் உட்பட பலரும் கலந்துகொண்டனர்.