பயனாளியிடம் கையளிப்பு





 ( வி.ரி.சகாதேவராஜா)

மண்முனை தென் எருவில் பற்று களுவாஞ்சிகுடி பிரதேச செயலகத்தின் குருமண்வெளி -11, மேற்கு கிராம உத்தியோகத்தர் பிரிவில் ரன்விமன வீடு பயனாளியிடம் கையளிக்கப்பட்டது.

 பிரதேச செயலாளர் திருமதி. சிவப்பிரியா வில்வரத்னம் நேற்று முன்தினம் இன்றைய தினம் (2024.02.15) அவ் வீட்டை பயனாளியிடம் கையளித்தார்.

குறைந்த வருமானம் பெறும் மக்களின் வாழ்க்கைத் தரத்தினை சமூக ரீதியாக மேலுயர்த்துவது மற்றும் வீடற்றவர்களுக்கு வீடு வழங்குவது நோக்கமாகக் கொண்டு 2023ம் ஆண்டு நடைமுறைப்படுத்தப்பட்டது இவ்  ரன்விமன வீட்டு வேலைத்திட்டம் ஆகும்.
அதன் கீழ் திருமதி.கருணாகரமூர்த்தி ராதிகா அவர்களுக்கு சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தினால் ரூபா 750,000/- வழங்கப்பட்டிருந்ததோடு, பயனாளியின் பங்களிப்பாக ரூபா 1700,000/-வுமாக மொத்தம் 2450,000/- செலவில் இவ்வீடு நிர்மாணிக்கப்பட்டிருந்தது. 

இந் நிகழ்வில் உதவி பிரதேச செயலாளர் திருமதி.சத்தியகௌரி தரணிதரன், தலைமையக முகாமையாளர் திருமதி.புவனேஸ்வரி ஜீவகுமார், கருத்திட்ட முகாமையாளர் திருமதி.விமலராணி யோகேந்திரன், எருவில் வங்கி முகாமையாளர் .எஸ்.ஆனந்தமோகன், சமூக அபிவிருத்தி உதவியாளர் தெ.உதயசுதன், கிராம சேவை உத்தியோகத்தர் திருமதி.நிரோசினி பிரசாந்த,  சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் பே.அச்சுதன், திட்டமிடல் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் திருமதி.மதனப்பிரியா சுந்தரலிங்கம், எஸ்.ஜெயகாந்தன், அலுவலக உத்தியோகத்தர்கள், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், சமுதாய அடிப்படை அமைப்பு உறுப்பினர்கள், கிராம அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள், ஆலய நிர்வாகிகள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்து சிறப்பித்தனர்.