காஸாவில் நிவாரண பொருட்களுக்காக மக்கள் ஓடும் காட்சி




 

வடக்கு காஸாவில்  நிவாரண பொருட்களுக்காக மக்கள் ஓடும் காட்சி இது. ஆனால் நிவாரண பொருள் கடலில் விழுந்துவிட்டது. கடலில் விழுந்த பொருட்களை எடுக்கும் முயற்சியில் சிலர் நீரில் மூழ்கினர். 12 பேர் கடலில் மூழ்கியும், 6 பேர் நெரிசலில் சிக்கியும் உயிரிழந்ததாக ஹமாஸ் கூறுகிறது.


வடக்கு காஸாவில் 70 சதவீதம் பேர் பசியில் வாடுவதாக உலக உணவுத் திட்டம் கூறுகிறது. இந்நிலையில், காஸாவின் பெய்த் லஹியாவில் வான்வழி நிவாரண உதவிகளைப் பெறும் முயற்சியில் மக்கள் உயிரிழந்துள்ளனர். கடந்த மார்ச் 25ஆம் தேதி வான்வழியாக நிவாரண உதவிகள் வழங்கப்பட்டன. இதைப் பெறும் முயற்சியில் 18 பேர் உயிரிழந்ததாக ஹமாஸ் தெரிவித்துள்ளது.


இஸ்ரேல் ஹமாஸ் போரால் உணவுப் பஞ்சம் பெரிய பிரச்னையாக உள்ளது. காஸாவுக்குள் தரை வழியாக உணவை கொண்டு செல்வதில் சிரமம் உள்ளது. காஸாவுக்கு  வான்வழியாக நிவாரண உதவி வழங்குவது உணவுத் தேவையை பூர்த்தி செய்யாது என மனிதநேய அமைப்புகள் எச்சரித்துள்ளன.