(C-14 Carbon Dating Test) மாதிரிகள் பெறப்பட்டு தயார் நிலையில்




 


எலும்புக்கூடுகள் எந்தக் காலத்திற்குரியது என்பது தொடர்பில் கண்டறிய காபன் பரிசோதனை என ஒன்று உள்ளது. அதனை அமெரிக்க ஆய்வுக்கூடத்தில் செய்ய வேண்டியுள்ளது. அதற்கு மாதிரிகளை நாம் எடுத்துள்ளோம். அதனை மேற்கொள்ளுமாறு நீதிமன்ற கட்டளை ஒன்றும் உள்ளது. அந்த மாதிரிகள் நீதிமன்ற வழக்கு பொருட்கள் களஞ்சியசாலையில் களஞ்சியப்படுத்தப்பட்டுள்ளது. அந்த மாதிரிகளை அமெரிக்க ஆய்வுக்கூடத்திற்கு அனுப்ப வேண்டும். அதற்கு செலவு ஒன்று ஆகும்தானே? அதிகாரி ஒருவர் செல்ல வேண்டும். மரண பரிசோதனையை செய்தவர் என்ற அடிப்படையில் நான்தான் மாதிரிகளை எடுத்துக்கொண்டு அமெரிக்காச் செல்ல வேணடும். சென்று ஒப்படைக்க வேண்டும். மாதிரியை பரிசோதிப்பதற்கு கொடுப்பனவு ஒன்றை ஆய்வுக்கூடத்திற்கு செலுத்த வேண்டும். ஆகவே இந்த நிதியை நீதிமன்றத்தால் வழங்க முடியாதல்லவா? ஆகவே ஓஎம்பியிடம் இதற்கு நிதியை வழங்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டிருக்கலாம். எனினும் அரசாங்கம் நிதியை கொடுத்தால் நான் நான் அமெரிக்காச் சென்று பணிகளை மேற்கொள்ள முடியும்.”

ஒரு தசாப்தம்

2013ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 17ஆம் திகதி மன்னார் திருக்கேதிஸ்வரம் பகுதியில் நீர் விநியோகத்திற்கென அகழ்வுப் பணியில் ஈடுபட்டவர்களினால் மனித எலும்புகள் கண்டுபிடிக்கப்பட்டன.

மன்னார் பொலிஸார் மனித எலும்புகள் கண்டெடுக்கப்பட்ட குறித்த பகுதியை பார்வையிட்டதோடு, 2013ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 20ஆம் திகதி மன்னார் நீதவான் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்தனர்.

மன்னார் நீதவான் நீதிமன்றம் வழங்கிய உத்தரவிற்கு அமைய, திருக்கேதீஸ்வரம் பகுதியில் அகழ்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டபோது பாரிய மனித புதைகுழி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டடது.

தொடர்ந்து இடம்பெற்ற அகழ்வுப் பணிகளுக்கு அமைய 81 மனித எலும்புக்கூடுகள் எடுக்கப்பட்டுள்ளதாக காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சார்பில் நீதிமன்றில் தொடர்ந்து முன்னிலையாகிவரும் சட்டத்தரணி வி. எஸ். நிரஞ்சன் தெரிவிக்கின்றார்.

இலங்கை பாதுகாப்புத் தரப்பினரால் வலிந்து காணாமலாக்கப்பட்ட நூற்றுக்கணக்கான தமிழர்களுக்கு என்ன நடந்தது என இதுவரை எவ்வித தகவல்களும் வெளியவரவில்லை.

திருக்கேதீஸ்வரத்தில் கண்டுபிடிக்கப்பட்ட மனிதப் புதைகுழியில் மீட்கப்பட்ட மனித எலும்புக்கூடுகள் வலிந்து காணாமலாக்கப்பட்ட தமது உறவினர்களுடையதாக இருக்கலாம் என 2,000 நாட்களைக் கடந்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள, காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்களான தமிழ்த் தாய்மார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.