5 வது வீடு பயனாளியிடம் கையளிப்பு...!!





நூருல் ஹுதா உமர் 


அம்பாரை மாவட்ட அரச சார்பற்ற நிறுவனமான நிந்தவூர் பெஸ்ட் ஒப் யங் சமூக சேவைகள் அமைப்பினால் "வாழ்வில் வசந்தம்" வேலைத்திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட 15 வது வீடு பயனாளியிடம் கையளித்து வைக்கும் நிகழ்வு இன்று இடம்பெற்றது 

 நிந்தவூர் பெஸ்ட் ஒப் யங் அமைப்பின் தலைவர் ஐ எம் நிஸ்மி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் நிந்தவூர் பிரதேச செயலாளர் சட்டத்தரணி ஏ எம் அப்துல் லத்தீப் பிரதம அதிதியாக கலந்து கொண்டு பயனாளரிடம் இவ் வீட்டை வைபவ ரீதியாக கையளித்து வைத்தார் 

அகில இலங்கை ஜமியத்துல் உலமா சபையின் பத்வா குழு இணைப்பாளர் சங்கைக்குரிய மௌலவி அல் ஹாபிழ் ஏ எச் மின்ஹாஜ் (முப்தி) அவர்களின் பங்குபற்றுகளுடன் இடம்பெற்ற இந்நிகழ்வில் நிந்தவூர் பிரதேச செயலக நிர்வாக உத்தியோகத்தர் எம் ரீ எம் சரீம், நிந்தவூர் பெஸ்ட் ஒப் யங் அமைப்பின் ஆலோசகர் கலாபூஷணம் அல் ஹாஜ் எஸ் அஹமது, செயலாளர் ஏ புஹாது, பொருளாளர் எஸ் ஏ பாஸித், திட்ட முகாமையாளர் எம் எஸ் எம் நிப்றாஸ், நிந்தவூர் சீ ஓ லெஸ்தகீர் சர்வதேச கல்லூரியின் நிதிஉதவியாளர் ஏ அன்வர், உட்பட பலரும் கலந்து கொண்டனர் 

நிந்தவூரில் வீடற்றோருக்கான வீட்டு வசதியை ஏற்படுத்தி கொடுக்கும் நோக்குடன் நிந்தவூரை சேர்ந்த கல்விமான் மர்ஹும் சீ ஓ லெஸ்தகீர் அவர்களின் புதல்வரும், இலங்கை சுங்க திணைக்களத்தின் ஓய்வுநிலை பிரதிப் பணிப்பாளர் ஓ எல் சப்ரி இஸ்மத்தின் முழுமையான நிதிப் பங்களிப்புடன் பெஸ்ட் ஒப் யங் அமைப்பினால் இந்த வீடு நிர்மாணிக்கப்பட்டது

நிந்தவூர்-4 ம் பிரிவில் இருந்து தாய் தந்தையை இழந்த, வீட்டு வசதியற்ற பபயனாளி ஒருவருக்கே இந்த வீடு கையளிக்கப்பட்டது 

இதன் மூலம் வாழ்வதற்கு ஓரளவேனும் வசதியான வீடின்றி கஷ்டப்பட்ட ஏழைக் குடும்பத்தின் நிரந்தர வீட்டுக்கான கனவு இந்த ரமழானில் நிறைவேறுகின்றது