அக்கரைப்பற்று பட்டின ஜும்ஆ பள்ளிவாயலில், 27 வது நோன்பினை முன்னிட்டு சிறப்பு நிகழ்ச்சிகள்




 



ரமழான் கால இறுதிப் பத்து நாட்களில், விசேட வணக்க வழிபாடுகளில்,மக்கள் அக்கரைப்பற்று பட்டினப் பளளிவாயலிலும் ஈடுபட்டு வந்திருந்தனர். ரமழான் நோன்பு 27 இற்கான விசேட நிகழ்ச்சிகள் சனிக் கிழமை இரவில் துவங்கி ஞாயிறு அதிகாலை வரை பயான் இடம் பெற்றிருந்தது. தராவீஹ் தொழுகையினை ஹாபிழ்களான, றியாஸ்தீன்,ஹாதி ஆகியோர் நிகழ்த்திய அதேவேளையில், தஸ்பீஹ் தொழுகையினை மௌலவி ஐயுப்கான் அவர்களும்,  விசேட பயான் சொற்பொழிவுகளை கலாநிதி அல்ஹாபிழ் சித்திக் (அஸ்ஹரி அவர்களும், துஆப் பிரார்தனையினை கலாமுல்லாஹ் ரசாதி அவர்களும், நடத்தியிருந்தார்கள்.

கியாமுல் லைல் தொழுகையைத்  தொடர்ந்து, சுமார்  1600 பேருக்கு  சஹர் உணவுகளும் வழங்கி வைக்கப்பட்டது.