காஸா சிறுவர் நிதியத்துக்கு கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரி, ஸாஹிரா கல்லூரி என்பன நிதி உதவி !




 


நூருல் ஹுதா உமர்


கல்முனை வலயக் கல்வி பணிப்பாளர் எம்.எஸ்.சஹதுல் நஜீம், கணக்காளர் வை. ஹபீபுல்லாஹ் ஆகியோரின் வழிகாட்டலில் காஸா சிறுவர்களின் நலன்புரி நடவடிக்கைகளுக்காக ஆரம்பிக்கப்பட்டுள்ள ஜனாதிபதி நிதியத்திற்கு கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரி (தேசிய பாடசாலை) ஆசிரியர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் நிதிப்பங்களிப்பில் மூன்று இலட்சத்து நாற்பத்தேழாயிரம் ரூபா (LKR. 3,47,000.00) நிதியினை உத்தியோகபூர்வமாக கையளிக்கும் நிகழ்வு இன்று (08) கல்முனை வலயக் கல்விப் பணிமனையில் இடம்பெற்றது.

கல்லூரியின் அதிபர் ஏ.பி. நஸ்மியா சனூஸ் வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.சஹ்துல் நஜீம் அவர்களிடம் குறித்த தொகைக்கான கடிதத்தினை கணக்காளர் வை.ஹபீபுல்லாஹ் முன்னிலையில் கையளித்தார்.
இந்நிகழ்வில் பிரதிக் கல்விப் பணிப்பாளர் (நிர்வாகம்), கல்லூரியின் பிரதி உதவி அதிபர்கள், ஆசிரியர்கள் மற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

அதைப்போன்றே காஸா சிறுவர்களின் நலன்புரி நடவடிக்கைகளுக்காக ஆரம்பிக்கப்பட்டுள்ள ஜனாதிபதி நிதியத்திற்கான கல்முனை சாஹிரா தேசிய பாடசாலையின் பங்களிப்பாக 623,500/- ரூபாய்க்கான ஆவணத்தை பாடசாலை அதிபர் எம்.ஐ. ஜாபீர் தலைமையிலான பாடசாலை குழாத்தினர் வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.சஹ்துல் நஜீம் அவர்களிடம் குறித்த தொகைக்கான கடிதத்தினை கணக்காளர் வை. ஹபீபுல்லாஹ் முன்னிலையில் கையளித்தனர் .