சிவப்பு எச்சரிக்கை
 


பலத்த காற்று மற்றும் கடல் கொந்தளிப்பு தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கையை விடுத்துள்ளது.

அடுத்த 24 மணி நேரத்திற்கு செல்லுபடியாகும் வகையில் இந்த அறிவிப்பை அந்த திணைக்களம் வெளியிட்டுள்ளது.

ரிமால் புயல் காரணமாக, நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளிலும், வங்காள விரிகுடா கடற்பரப்பிலும் பலத்த காற்றுடன் கனமழை பெய்யக்கூடும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன் அந்த கடற்பரப்புகள் மிகவும் கொந்தளிப்பாகக் காணப்படும் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடக்கு வங்காள விரிகுடாவில் நிலைகொண்டிருந்த ரிமால் புயல் இன்று (26) காலை வேளையில் அதிதீவிர புயலாக உருவெடுத்துள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.