ஜே.கே.யதுர்ஷன்
திருக்கோவில் பிரதேசம் மண் டாணை பகுதியில் ஒருவாரமாக தொடரும் காட்டு யானை அட்டகாசம்...
அம்பாறைமாவட்டம் திருக்கோவில் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட மண்டானை பகுதியில் ஒரு வாரமாக காட்டு யானை ஒன்று அட்டகாசம் பண்ணி வருகின்றது....
குறித்த காட்டு யானை மண்டாணை பகுதியில் கடந்த வாரம் வருகை தந்து செல்லாமல் ஊர்மக்களுக்கும் மின்பிடி மற்றும் விவசாயம் பயி்ர்செய்கையில் ஈடுபடும் பிரதேச வாசிகளுக்கு அச்சத்தை ஏற்படுத்தி வருகின்றது...
இது பற்றி அப்பகுதி மக்களை நாம் விநவிய போது மின்பிடி மற்றும் விவசாய செயற்பாடுகளுக்கு அப்பகுதிக்கு செல்ல அச்சபடுவதாகவும் தாங்கள் இது பற்றி குறித்த அதிகாரிகளுக்கும் தகவல் வழங்கிய போதும் அவர்கள் அதற்குரிய நடவடிக்கையினை மேற்கொள்ளாமல் இருப்பதாகவும் குறித்த மக்கள் தெரிவித்து வருகின்றனர்.....
மேலும் குறித்த யானை நோய்வாய் பட்டு இருக்கலாம் எனவும் சந்தேகம் தெரிவித்து வருகின்றனர்...
இதற்கான சரியான நடவடிக்கையினை மேற்கொள்ளுமாறு பொதுமக்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்....
படம் அப்பகுதி மக்களால் அனுப்ப பட்டது..!!!
ஜே.கே.யதுர்ஷன்
திருக்கோவில் பிரதேசம்..
Post a Comment
Post a Comment