நூருல் ஹுதா உமர்
சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் தாய் சேய் நல மேம்பாட்டை கருத்தில் கொண்டு பொது சுகாதார மருத்துவ மாதுக்களின் சேவையை வினைதிறன் மிக்கதாக மாற்றி அமைப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இதற்கமைய "கர்ப்பத்தினால் தூண்டப்பட்ட உயர் குருதி அமுக்கம்" குறித்த விழிப்பூட்டல் செயலமர்வு இன்று 2024.02.28 சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக கூட்ட மண்டபத்தில் இடம்பெற்றது.
இந்த நிகழ்வில் சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் ஜே. மதன் விளக்க உரை ஆற்றினார். ஏற்கனவே சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் கடமையாற்றும் பொதுச் சுகாதார மருத்துவ மாதுக்களுக்கு தொழில் தேர்ச்சிக்கான வழிகாட்டல் மற்றும் ஆலோசனைகள் அடங்கிய பயிற்சிகள் வாராந்தம் இடம்பெற்று வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வில் பொதுச் சுகாதார தாதிய சகோதரி, மேற்பார்வை பொது சுகாதார மருத்துவ மாது மற்றும் பொதுச் சுகாதார மருத்துவ மாதுக்கள் அனைவரும் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.


Post a Comment
Post a Comment