Reports/SathyaPiragaash,SakatheveRaja,FaarukShihaan
அம்பாறை மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் வேலைவாய்ப்பு கோரி காரைதீவில் இன்று (15) சனிக்கிழமை கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை ஆரம்பித்திருந்தனர்.காரைதீவு விபுலானந்தா சதுக்கத்தில் உள்ள பொலிஸ் சாவடிக்கு அருகில் பல்வேறு சுலோகங்களை ஏந்தி பட்டதாரிகள் கொளுத்தும் வெயிலில் கவனயீர்ப்பு போராட்டத்தை அமைதியாக முன்னெடுத்தனர்.இதுவரை வேலைவாய்ப்பு தொடர்பில் எமக்கு எந்தவொரு தகவலும் கிடைக்கவில்லை எனவும் வெளிப்படையாக பட்டதாரிகளின் நிலைமை குறித்து தகவல்களை வெளியிட நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என கவனயீர்ப்பு போராட்டத்தை மேற்கொண்டவர்கள் ஊடகங்களிடம் தெரிவித்தனர்.குறித்த போராட்டத்திற்கு ஆதரவாக ஏனைய வேலையற்ற பட்டதாரிகள் தமது தொழில் உரிமையினை வலியுறுத்தும் வகையிலான பல்வேறு கோசங்களையும் எழுப்பி உரிய தரப்பினர் தீர்வினை பெற்றுத் தருமாறு கோரிக்கை விடுத்தனர்.இதேவேளை குறித்த போராட்டத்திற்கு காரைதீவு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஆர் எஸ்.ஜெகத் வருகை தந்து பார்வையிட்டதுடன் பொலிசார் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment
Post a Comment