#வரலாற்றில்_ஒருபோதும் #இல்லாத #முன்னுதாரணத்துடன் #நடைபெற்ற_ அக்கரைப்பற்று #முஸ்லிம்_மத்திய #கல்லூரியின்_மரதன்_ஓட்ட #நிகழ்வு!!!!!
#சர்வதேச_மட்டத்திற்கு
#நிகராக #நடைபெற்று_முடிந்த #மரதன்_நிகழ்வு
எமது அக்கரைப்பற்று முஸ்லிம் மத்திய கல்லூரி தேசிய பாடசாலையின் 2025 ஆம் ஆண்டுக்கான இல்ல விளையாட்டு நிகழ்வுகளில் முதல் போட்டி நிகழ்வாக இன்று 13/02/2025 மரதன் ஓட்ட நிகழ்ச்சி அதிபரின் தலைமையில் கோலாகலமாக நடைபெற்றது.
மேலும் இந்நிகழ்வில் எமது கல்லூரியின் வரலாற்றில் என்றுமில்லாத முன்னுதாரணமாக முதலிடம் பெற்ற மாணவனுக்கு பெறுமதி மிக்க மவுன்டன் பைக் பரிசாக வழங்கப்பட்டது.
இதனை எமது பாடசாலையின் பழைய மாணவர் சங்க நிறைவேற்றுக் குழு உறுப்பினர் #FA.#குத்தூஸ் அவர்கள் அன்பளிப்புச் செய்திருந்தார்
இந்நிகழ்வுக்கு அதிதியாக அழைக்கப்பட்டிருந்த அவரின் கரங்களினாலேயே இந்தப் போட்டி தொடங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இன்னும் இந்நிகழ்வின் அதிதிகளாக கல்லூரி அதிபர் #AL.#நஸீபா மற்றும் நிர்வாகத்திற்கான பிரதி அதிபர் #MA.#ஸலாகுதீன்,இணைப்பாட விதான செயற்பாடுகளுக்கான பிரதி அதிபர் #லெப்டினன் #NM.#முஹமட்_ஸாலிஹ் பாடசாலையின் SDEC செயலாளர் #சபூர்_ஆதம்,முன்னாள் பிரதி அதிபர் இக்பால் ஆகியோர் கலந்து கொண்டதுடன் கல்லூரியின் விளையாட்டுப் பொறுப்பாசிரியர்கள் ஏனைய ஆசிரியர்கள்,பெற்றோர்கள்,பழைய மாணவர்கள் என பலரும் ஒத்துழைப்பு நல்கினர்.
இதில்
🥇 T. Risky Ahamed from Firthouzy secured 1st Place.
🥈 N.Z. Shiran from Firthouzy claimed 2nd Place.
🥉 M.M. Atheek Ahamed from Zeerazy finished in 3rd Place.
ஆகிய மாணவர்கள் முறையே முதல் மூன்று இடங்களைப் பெற்றுக் கொண்டனர்.
அத்துடன் இப்போட்டி நிகழ்வுக்கான வீதிப் பாதுகாப்பினை ஏற்படுத்தித் தந்த அக்கரைப்பற்று பொலிஸ் நிலைய வீதிப் போக்குவரத்து பிரிவு பொலிஸாருக்கும் அம்புலன்ஸ் சேவையினைப் பெற்றுத்தந்த அக்கரைப்பற்று ஆதார வைத்திய சாலை உத்தியோகத்தர்களுக்கும் பாடசாலை சமூகம் சார்பாக மனமார்ந்த நன்றிகளைக் கூறிக் கொள்கிறோம்.
#MCC_MEDIA_UNIT MCC PPA Qatar Chapter PPA of Akkaraipattu Muslim Central College -National School MCCANS UAE CHAPTER



Post a Comment
Post a Comment