பாறுக் ஷிஹான்
எதிர்வரும் நோன்பு காலத்தை முன்னிட்டு அண்மைக்காலமாக அம்பாறை மாவட்டத்தில் உள்ள சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளில் பல்வேறு சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதன் பிரகாரம் சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எம்.எம். நௌசாத் தலைமையில் கடந்த புதன்கிழமை (12) இரவு திடீர்ச் சோதனை மேற்கொள்ளப்பட்டிருந்
இதன் போது மனித நுகர்வுக்குப் பொருத்தமற்ற முறையில் பழுதடைந்த மற்றும் களஞ்சியப்படுத்திய உணவுகளை வைத்திருந்த ஒன்பது கடை உரிமையாளர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
சமையல் பாத்திரங்கள் மற்றும் சமையல் பொருட்களின் தரம் போன்றவற்றை சுகாதார முறைப்படி பேணுமாறும் ஆலோசனை வழங்கியதுடன் அறிவித்தல்களைப் பேணி நடக்காத உணவகங்கள் மீது சட்டநடவடிக்கை எடுக்கப்பட்டமை சுட்டிக்காட்டத்தக்கது.


Post a Comment
Post a Comment