மனிதன் தன்னைத்தானே வருத்திக் கொள்வதில் இறைவனுக்கு விருப்பமா என்றால் அதுவும் கிடையாது. நோன்பின் நோக்கம் மனிதன் பக்குவப்பட வேண்டும் என்பதுதான். அதே நேரம், நோன்பு வைப்பதால் உடலில் உண்டாகும் மாற்றங்கள் நமது ஆரோக்கிய வாழ்வுக்கு நலம் தருபவை என்பது மருத்துவ ரீதியாக நிரூபிக்கப்பட்டுள்ளது.
நோன்பின் மாண்புகள்:
- நோன்பைத் தவிர, ஆதமுடைய மகனின் ஒவ்வொரு செயலும் இறைவனுக்குரியது என நபிமொழி கூறுகின்றார்.
- நோன்பின் நோக்கமே இறையச்சத்தை ஏற்படுத்திக் கொள்வதுதான்.
- நோன்பை அனுசரிப்பவர்கள் அதிகாலை முதல் மாலை வரையில், உண்ணாமல், நீரருந்தாமல், புகைக்காமல், மற்றும் வேறு தீய பழக்கங்களில் ஈடுபடாமல் இருப்பர்.
- இஸ்லாமிய நம்பிக்கையின்படி முகம்மது நபிக்கு முதன் முதலில் குரானை வெளிப்படுத்திய மாதத்தை நினைவுகூறும் விதமாக இந்த நோன்பை அனுபவிக்கிறார்கள்.
- ரமலான் 'ஈதுல் ஃபித்ர்' நன்னாளை நோன்புப் பெருநாளாகவும் ஈகைத் திருநாளாகவும் உலகெங்கும் வாழும் முஸ்லிம் பெருமக்கள் உவகையோடு கொண்டாடி மகிழ்கின்றனர்.
.jpg)

Post a Comment
Post a Comment