காஸா, சிறுவனின் படம் 2025ஆம் ஆண்டின் உலக பத்திரிகை புகைப்பட விருதை வென்றுள்ளது





 காஸா போரில் பாதிக்கப்பட்ட ​சிறுவனின் படம் 2025ஆம் ஆண்டின் உலக பத்திரிகை புகைப்பட விருதை(World Press Photo of the Year) வென்றுள்ளது.


நியூயார்க் டைம்ஸுக்காக பாலத்தீன புகைப்படக் கலைஞர் சமர் அபு எலூஃப் என்பவர் இந்த புகைப்படத்தை எடுத்தார். இந்தப் படத்தில் இருப்பது, மார்ச் 2024இல் இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில் இரு கைகளையும் இழந்த 9 வயது சிறுவன் மஹ்மூத் அஜ்ஜூர்.


இரண்டு புகைப்படங்கள் இரண்டாம் இடத்தைப் பிடித்தன.


ஒன்று, அமெரிக்க-மெக்ஸிகோ எல்லையில் குடியேற்றத்தின் சவாலான யதார்த்தங்களை காட்டுகிறது.


மற்றொரு புகைப்படம், ஒரு காலத்தில் படகில் சென்றடையக்கூடியதாக இருந்த இடத்தில் தற்போது வறட்சியாக காணப்படும் அமேசான் கிராமத்தில் ஒரு இளைஞன் தனது தாய்க்கு உணவு கொண்டு செல்வதைக் காட்டுகிறது.


141 நாடுகளைச் சேர்ந்த 3778 புகைப்படக் கலைஞர்களின், 59320 புகைப்படங்களிலிருந்து இந்த ஆண்டு வெற்றியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.


உலக பத்திரிகை புகைப்படக் கண்காட்சி 2025, மே 23 முதல் ஆகஸ்ட் 25 வரை லண்டனில் நடைபெறும்.


📷 1. Samar Abu Elouf, The New York Times

📷 2. John Moore, Getty Images

📷 3. Musuk Nolte, Panos Pictures, Bertha Foundation

📷 4. Marijn Fidder


📷 1. Samar Abu Elouf, The New York Times
📷 2. John Moore, Getty Images
📷 3. Musuk Nolte, Panos Pictures, Bertha Foundation
📷 4. Marijn Fidder