லெஜன்ட் பிரிமியர் லீக் கிரிக்கெட் சுற்றுப்போட்டி



 


வி.சுகிர்தகுமார்      


 ஆலையடிவேம்பு, திருக்கோவில் பிரதேச செயலகங்களின் எல்லைக்குட்பட்ட பிரபல விளையாட்டுக்கழகங்களின் 40 வயிதிற்கும் மேற்பட்ட மூத்த 78 கிரிக்கெட் வீரர்களை உள்ளடக்கி அணிக்கு 6 அணிகளாக மோதிக்கொள்ளும் 10 ஓவர்கள் மட்டுப்படுத்தப்பட்ட மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டியானது நேற்று (18)ஆரம்பமானது.
13 வீரர்களை கொண்டதாக பிரிக்கப்பட்டு ஆறு அணிகளாக தங்களுக்குள் மோதும் சுற்றுப்போட்டியானது 20ஆம் திகதிவரை  தம்பிலுவில் ஆதவன், தம்பட்டை லெவன் ஸ்டார் மைதானங்களில் நடைபெறவுள்ளது.
லெஜன் ஸ்டார்,  லெஜன் வோரியஸ்,  லெஜன்ட் கிங்,      லெஜன்ட் போஸ், சுப்பர் லெஜன்ட்,  பிளாஸ் லெஜன்ட் என  கடந்த காலங்களில் கிரிக்கட் விளையாட்டில் கிழக்கு மைதானங்களில் பிரகாசித்த பல நட்சத்திர வீரர்களை உள்ளடக்கி அணிகள் களம் காணுகின்றன.
பொறியியலாளர் ரதீசன் மற்றும் மாகாண கல்வித்திணைக்களத்தின் உதவிக்கல்விப்பணிப்பாளர் சிறிதரன் ஆகியோரின் வழிகாட்டலில் இடம்பெறும் சுற்றுப்போட்டியின் ஆரம்ப நிகழ்வில் மட்டக்களப்பு மேற்கு வலயக்கல்விப்பணிப்பாளரும் மூத்த வீரருமான ஜெயச்சந்திரன் தேசிய கொடியினை ஏற்றி வைத்து தேசிய கீதம் இசைக்கப்பட்டதுடன் உதவிக்கல்விப்பணிப்பாளர் சிறிதரன் 40 பிளஸ் கழக கொடியினை ஏற்றிவைத்தார்
தொடர்ந்து போட்டித்தொடரில் பங்குபற்றும் அணிகளின்  கொடிகளை அணித்ததலைவர்கள் ஏற்றி வைத்து போட்டிகள் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
அணிகளின் தலைவர்களாக லக்ஷ்மிகாந்த் யுவேந்திரா - மகேந்திரன்  சுரேஸ்குமார் - அகிலன் - ஜெயராஜ் ஆகியோர் தலைமை தாங்கி வழிநடத்துகின்றமை குறிப்பிடத்தக்கது.