நுவரெலியா நிருபர் செ.திவாகரன்-
நுவரெலியாவின் இதமான காலநிலை, இயற்கை வளம் மிகுந்த பகுதிகள் மற்றும் சுற்றுலாத் தலங்களை கண்டு ரசிக்க ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனா்.
இதில் கிரகரி வாவிக்கு தினமும் உள்ளுர் வெளிநாட்டு உல்லாச பயணிகள் ஆயிரக்கணக்கானோர் தமது பொழுதைக் கழிப்பதற்காக வருகை தருகின்றனர்.
குறிப்பாக கிரகரி வாவி கரையோரத்திற்கு வரும் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் வகையில் நுவரெலியா மாநகர சபை ஏராளமான பொழுதுபோக்கு அம்சங்கள் அடங்கிய நிகழ்ச்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். இதன் காரணமாக ஏராளமான சுற்றுலா பயணிகள் குடும்பம், குடும்பமாக குவிந்து வருகின்றனா்.
இவ்வாறு வரும் சுற்றுலா பயணிகள் ஓய்வு எடுப்பதற்கு ஏற்ற சகல வசதிகளுடன் கூடிய ஏராளமான ஹோட்டல்களும் இப்பகுதிகளில் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
-நுவரெலியா நிருபர் செ.திவாகரன்-


Post a Comment
Post a Comment