பாறுக் ஷிஹான்
நுரைச்சோலை சுனாமி வீட்டித்திட்டத்தை மக்களுக்கு மீட்டு கொடுப்போம் என்ற ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்காவின் கருத்தை உலமா கட்சி பாராட்டுவதாக உலமா கட்சித்தலைவர் முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்துள்ளார்.
இது பற்றி உலமா கட்சித்தலைவர் முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்ததாவது
சுனாமியால் பாதிக்கப்பட்ட வீட்டுத்திட்டமே அம்பாறை நுரைச்சோலை சுனாமி வீட்டுத்திட்டமாகும். சவூதி அரசால் சுனாமியால் பாதிக்கப்பட்ட முஸ்லிம்களுக்கு வழங்கப்பட்டிருந்தது.அன்றைய மஹிந்த அரசு வழங்கவிருந்த குறித்த வீட்டுத் திட்டத்தை சம்பிக்க ரணவக்க போன்ற இனவாதிகள் முன்னின்று இதற்கெதிராக வழக்கு தொடரப்பட்டு நிறுத்தப்பட்டது.
இதனை ஜனாதிபதி அதிகாரத்தை கொண்டு சுனாமியால் அம்பாரை மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கும் படி நாம் பல தடவை மஹிந்த ராஜபக்ஷவை கேட்டிருந்தோம். ஆனால் எதுவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
பின்னர் முஸ்லிம் காங்கிரஸ் மக்கள் காங்கிரஸ் கட்சிகளின் ஆதரவுக்கிணங்க முஸ்லிம்களின் 80 வீத வாக்குககால் ஜனாதிபதியான மைத்திரிபாலவும் இதனை வழங்க முன் வரவில்லை. இதற்காக அழுத்தம் கூட கொடுக்க முடியாத கோழைகளாக ரவூப் ஹக்கீமும் ரிசாத் பதியுதீனும் மைத்திரி அரசில் அமைச்சர்களாக சுகம் அனுபவித்தனர்.
இந்த நிலையில் தற்போதைய ஜனாதிபதி அவர்கள் விரைவில் இந்த வீட்டித்திட்டத்தை வழங்குவோம் என பகிரங்கமாக சொல்லியிருப்பது மகிழ்ச்சியை தருகிறது.இந்த 2025ம் ஆண்டு முடிவதற்குள் மேற்படி வீட்டுத்திட்டம் வழங்கப்படுவது நல்லது என்பதை உலமா கட்சி கூறிக்கொள்வதாக தெரிவிக்கப்பட்டள்ளது.


Post a Comment
Post a Comment