( வி.ரி. சகாதேவராஜா)
காரைதீவு பிரதேச செயலக மட்ட பூப்பந்தாட்ட போட்டிகளில் காரைதீவு விளையாட்டு கழகம் இம்முறையும் ஆண் பெண் இரண்டுக்குமான போட்டிகளிலும் முதலிடத்தைப் பெற்று சாம்பியனாக தெரிவு செய்யப்பட்டது.
காரைதீவு பிரதேச செயலக மட்ட விளையாட்டு விழாவின் பூப்பந்தாட்ட போட்டிகள் நிந்தவூர் எம்ஏசி விளையாட்டு பூங்காவில் (MAC Sports Park) மைதானத்தில் நேற்று முன்தினம் இடம்பெற்றன.
ஆண்களுக்கான போட்டியில் காரைதீவு வி.க முதலிடத்தையும், இரண்டாமிடத்தை காரைதீவு பூப்பந்தாட்ட வி.க உம் பெற்றுக் கொண்டன.
பெண்களுக்கான போட்டியில் காரைதீவு வி.க முதலிடம் பெற்றுக்கொண்டது.


Post a Comment
Post a Comment