நூருல் ஹுதா உமர்
Connect- 2025 இளைஞர் கழகங்கள் எனும் தொனிப் பொருளில் இளைஞர் கழகம் அமைத்தல் மற்றும் மறுசீரமைத்தல் எனும் செயல் திட்டத்தில் தேசிய இளைஞர் தினத்தை (2025.05.23) முன்னிட்டு முதலாவது இளைஞர் கழகம் பொத்துவில் பிரதேச செயலக பொத்துவில் - 01 கிராம சேவகர் பிரிவில் இளைஞர் சேவை உத்தியோகத்தர் ஏ.ஜீ.அன்வர் அவர்களால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
நிகழ்வில் அதிதிகளாக தேசிய இளைஞர் சேவைகள் மன்ற கிழக்கு மாகாண உதவிப் பணிப்பாளர் முபாறக் அலி, பொத்துவில் பிரதேச செயலக கிராம நிலதாரிகள் நிர்வாக உத்தியோகத்தர் எஸ்.எம்.எம்.நசீர், பொத்துவில் பிரதேச செயலக உதவி சமுர்த்தி முகாமையாளர் ஏ.கே.எம். ஹாரூன், பொத்துவில் 01 கிராமத்திற்கு பொறுப்பான கிராம சேவை உத்தியோகத்தர் எம்.வீ.காமிலா, பிரதேச சம்மேளன முன்னாள் தலைவர் எம்.ஏ.எம் நௌபல் மற்றும் பிரதேச சம்மேளனத்தின் உறுப்பினர்கள், இளைஞர் கழக அங்கத்தவர்கள் என பலரும் கலந்து கொண்டன


Post a Comment
Post a Comment