ஓட்டமாய் வந்து,இடி விழுந்து தென்னை மரத்தில் ஓட்டமாவடியில்




 ஓட்டமாவடியில் இடி விழுந்து தென்னை மரத்தில் தீ! ஒரு பகுதியில் மின்சாரம் துண்டிப்பு!


மட்டக்களப்பு மாவட்டத்தில் பல இடங்களில் திடீர் மழையுடன் இடி மின்னல் தாக்கம் இன்று (14) இரவு ஏற்பட்டுள்ளது.


இந்நிலையில், ஓட்டமாவடி பகுதியில் மழையுடன் பாரிய இடி முழக்கம் ஏற்பட்டது.


ஓட்டமாவடி மூன்றாம் வட்டாரம் ஹுஸைனியா வீதியிலுள்ள வீட்டு வளவிலுள்ள தென்னை மரத்தில் இடி விழுந்ததில் தென்னை மரம் தீப்பற்றி, தொடர் மழை காரணமாக தீ கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது.


மின்னல் தாக்கம் காரணமாக அப்பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.