இந்தியா-பாகிஸ்தான் இடையில் அணு ஆயுதப் போர் மூளுமா?



 


சமீபத்தில் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான மோதலில், இறுதிகட்ட எச்சரிக்கைகளோ, அணு ஆயுதப் போரைக் குறிக்கும் அறிவிப்புகளோ இல்லை.


ஆனால், அடுத்தடுத்து நடத்தப்பட்ட ராணுவத் தாக்குதல்கள், மறைமுகச் சமிக்ஞைகள் மற்றும் விரைவாக மேற்கொள்ளப்பட்ட சர்வதேச தலையீடு ஆகியவை இந்தப் பிராந்தியத்தின் மோசமான சூழ்நிலை குறித்த அச்சத்தைச் சுட்டிக் காட்டின.


இந்த நெருக்கடி அணு ஆயுதப் போரை நோக்கிச் செல்லவில்லை, ஆனால் அது எவ்வளவு விரைவாக அந்த ஆபத்தை நோக்கி முன்னேறும் என்பதற்கான நினைவூட்டலாக அது இருந்தது.


இத்தகைய நெருக்கடி எவ்வளவு விரைவாக பெரும் அழிவாக மாறலாம் என்பதை விஞ்ஞானிகளும் கணித்துள்ளனர்.