பாறுக் ஷிஹான்
மருதமுனை அனைத்துப் பள்ளிவாசல் அமையத்தினால் அமைக்கப்பட்டுள்ள குடும்ப நல்லிணக்க குழுவினால் தீர்வு எட்டப்படுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும். இங்கும் தீர்வு எட்டப்படாத பிரச்சினைகளே காதி நீதிமன்றத்திற்கு கொண்டு செல்வதற்கு ஆலோசனை வழங்கப்படும்.
அதேபோல் நேரடியாக காதிநீதிமன்றம் செல்கின்ற பிரச்சினைகளும் காதி நீதிபதியினால் இறுதி சமரச முயற்சிக்காக மருதமுனை அனைத்துப் பள்ளிவாயல்கள் அமையத்தியத்தின் கீழ் இயங்கி வருகின்ற குடும்ப நல்லிணக்கக் குழுவிற்கு அனுப்பி வைக்கப்பட்டதன் பின்பே இறுதி தீரமானம் எடுக்கப்பட வேண்டுமென உடன்பாடு காணப்பட்டுள்ளது.
வீடு வாடகைக்க பெறப்போகின்ற பிரதேசத்தில் உள்ள பள்ளிவாசல்களில் சமர்ப்பித்தல் வேண்டும். இதன் பின்னர் இவ்விடயம் தொடர்பாக பள்ளிவாசல்கள் பொலிஸ் நிலையத்திற்கும்இ கிராம சேவகர்களுக்கும் அறிவித்தல் வேண்டும். (தேவையற்ற பிரச்சினைகளை தவிர்த்துக்கொள்வதற்காக இவ்விடயத்தில் வீடு வாடகைக்கு வழங்குபவர்கள் மிகக் கவனத்துடன் இருக்க வேண்டுமென ஆலோசனை வழங்கப்படுகின்றது)
முழுமையாக ஊரினதும் நமது ஊரில் வாழும் இளைஞர்களினதும்இ மாணவர்களினதும் எதிர்கால நலன் கருதி எட்டப்பட்டுள்ள இவ் ஆரம்ப முயற்சிக்கு தாங்கள் அனைவரும் ஒத்துழைப்பு வழங்கி உதவுமாறு மதிப்பிற்குரிய பெற்றோர்களினையும்இ சமூக ஆர்வலர்களையும் மற்றும் இளைஞர்களையும்இ மாணவர்களையும் அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.
அனைத்துப் பள்ளிவாசல்கள் அமையம்
மருதமுனை.


Post a Comment
Post a Comment