இலங்கைத் தென் கிழக்குப் பல்கலைக்கழகததில், அண்மையில் சிலேஸ்ட மாணவர்களால், முதலாம் வருட மாணவர்கள் பகிடிவதை செய்யப்பட்ட வீடியோ காட்சிகள் வைரலாகின. இதனால், குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய 32 மாணவர்களுக்கு பல்கலைக்கழகத்தினால், வகுப்புத் தடை விதிக்கப்பட்டிருந்தது.
குறித்த சம்பவத்துடன் தொடர்புற்றதாக சந்தேகிக்கப்படும், மாணவர்கள் 12 பேர், இன்றைய தினம் அக்கரைப்பற்று பொலிசாரினால், அக்கரைப்பற்று நீதிமன்ற மேலதிக கௌரவ நீதிபதி தெசிபா ரஜீவன் முன்னிலையில், ஆஜர்படுத்தப்பட்டிருந்தனர்.
இன்னும் சில மாணவர்கள் கைது செய்யப்பட வேண்டியிருப்பதாகவும், குறிப்பிட்ட சம்பவத்துடன் தொடர்புபட்ட சந்தேக நபர்கள், அடையாள அணி வகுப்புக்கு உட்படுத்தப்பட வேண்டியிருப்பதாகவும் பொலிசாரால்ஈ தெரிவிக்கப்பட்டதை அடுத்து, எதிர்வரும் ஜீலை மாதம் 1ம் திகதி வரை விள்க்கமறியலில் வைக்குமாறு, அக்கரைப்பற்று நீதிமன்ற மேலதிக நீதிபதி கௌரவ தெசிபா ரஜீவன் கட்டளை பிறப்பித்தார்.
.jpg)

Post a Comment
Post a Comment