கதிர்காமத்திற்கான காட்டுப்பாதை 20 ஆம் தேதி திறக்கப்படும்!





 (வி.ரி.சகாதேவராஜா)


வரலாற்றுப்பிரசித்திபெற்ற கதிர்காம ஆடிவேல்விழாவிற்குச் செல்லும்
பாதயாத்திரீகர்களுக்கான காட்டுப்பாதை எதிர்வரும் 20ஆம் திகதி
திறக்கப்படும். மீண்டும் அது யூலை 04ஆம் திகதி மூடப்படும். 

இவ்வாறு அம்பாறைமாவட்ட  அரசாங்க அதிபர் சிந்தக அபேவிக்ரம  ஊடகங்களுக்கு தெரிவித்தார்.

 அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில் .

வருடாந்தம் வடமாகாணம்  தொடக்கம் சகல பகுதிகளிலுமிருந்து ஆயிரக்கணக்கான அடியார்கள் காட்டுப் பாதை ஊடாக கதிர்காம உற்சவத்திற்கு செல்வது வழக்கம்.கடந்த வருடம் சுமார் 35 ஆயிரம் பேர் இந்த காட்டுப்பாதை ஊடாக பயணித்தனர்.
 இம்முறை சுமார் 30,000 பேரை நாங்கள் எதிர்பார்க்கின்றோம். 20ஆம் தேதி குமண காட்டுப் பாதை திறக்கப்படும்.
குமண யால வனங்களினூடாக பயணிக்கும் பாதயாத்திரீகர்களுக்குஅவர்களுக்கான வசதிகள் அனைத்தும் செய்து கொடுக்கப்படும் என்றார்.