{ நூருல் ஹுதா உமர்)
சாய்ந்தமருது பிளாஸ்டர் விளையாட்டுக்கழகத்தின் ஏழாவது ஆண்டை முன்னிட்டு வாக்ஸ்போல் ஆயில் மார்ட் மற்றும் அமீனாஸ் நகையகம் அனுசரணையில் ஏற்பாடு செய்திருக்கும் வாக்ஸ்போல் ஆயில் மார்ட் சாம்பியன்ஸ் கிண்ண அணிகள் அறிமுகமும், குழுப்பிரிப்பும் சாய்ந்தமருது அல்- ஜலால் வித்தியாலய மண்டபத்தில் கழக செயலாளர் எம்.எல்.எம். பஸ்மீரின் நெறிப்படுத்தலில் நடைபெற்றது.
சாய்ந்தமருது பிளாஸ்டர் விளையாட்டுக் கழக தலைவர் எம்.ஐ.எம்.றிபாஜ் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் கிழக்கு மாகாணத்தின் பல்வேறு பிரதேசங்களையும் சேர்ந்த 24 அணிகள் கலந்து கொண்டதுடன் போட்டி நிரல்படுத்தலிலும் கலந்து கொண்டனர்.
இதன்போது வாக்ஸ்போல் ஆயில் மார்ட் நிறுவனர் யூ.எல்.சப்ரி பிரதம அதிதியாக கலந்து கொண்டு போட்டி நிரல்படுத்தலை நெறிப்படுத்தினார். மேலும் சாய்ந்தமருது கமு/கமு/ அல்- ஜலால் வித்தியாலய அதிபர் ரீ.கே.எம். சிராஜ், கிழக்கு மாகாண கூட்டுறவு ஊழியர்கள் ஆணைக்குழு முன்னாள் உறுப்பினர் யூ.எல்.என். ஹுதா, கழக தவிசாளர் ஏ.சி.எம். நிஸார், பொருளாளர் சீ.எம். முனாஸ், சாய்ந்தமருது கிரிக்கெட் சம்மேளன நிர்வாகிகள் உட்பட சாய்ந்தமருது பிளாஸ்டர் விளையாட்டுக் கழக நிர்வாகிகள், போட்டியில் கலந்து கொள்ளும் கழகங்களின் பிரதிநிதிகள், வீரர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
இதன்போது வெற்றிக் கிண்ணங்கள் அறிமுகம் செய்து வைக்கப்பட்டதுடன் போட்டி விதிமுறைகளும் தெளிவுபடுத்தப்பட்டது.


Post a Comment
Post a Comment