"கழுகுமலை பத்து" நூல் வெளியீடு!



 


( வி.ரி.சகாதேவராஜா)


யாழ்ப்பாணம் செல்வச்சந்நிதி ஆலயத்தில் இருந்து புறப்பட்ட ஜெயா வேல்சாமி தலைமையிலான யாழ் கதிர்காமம் பாதயாத்திரீகர்கள் 45 நாட்களில் நேற்று பொத்துவிலைச் சென்றடைந்தனர்.

முன்னதாக யாழ் கதிர்காமம் பாதயாத்திரீகர்கள் சங்குமண்கண்டி காட்டுப் பிள்ளையார் கோவிலை தரிசித்தனர்.

அங்கு 
அம்பாறை மட்டக்களப்பு மாவட்டங்களைச் சேர்ந்த தாதிய உத்தியோகத்தர்களில் அமைப்பான "அகத்தியம்" என்கின்ற அமைப்பினுடைய தலைவர் சிவஞானசீலன்  அவர்களுக்கான காலை மதியம் உணவுகளை வழங்கியதுடன் காட்டுப்பாதையில் முருகப்பெருமானின் "கழுகுமலை பத்து" எனும் பதிகத்தை புத்தக வடிவிலே அமைத்து  பாதயாத்திரை அன்பர்களுக்கு வழங்குகின்ற வைபவம் இடம்பெற்றது.

 இந் நிகழ்விலே பாராளுமன்ற உறுப்பினர் கவி. கோடீஸ்வரன்,  அம்பாறை மாவட்ட திருநாவுக்கரசு நாயனார் குருகுலத்தின் பணிப்பாளர் கண. இராசரத்தினம் , அகத்தியம் அமைப்பினுடைய தாதிய உத்தி உத்தியோகத்தர்கள் குழுவினரும் கலந்துகொண்டு அந்த நிகழ்வை சிறப்பித்தனர்.

 பாதயாத்திரை பற்றிய பாடல்களை அந்த இடத்திலே பஜனையாக பாடி பக்திபூர்வமான ஒரு வழிபாட்டுடன் நிகழ்வு இடம் பெற்று நிறைவு அடைந்ததமை குறிப்பிடத்தக்கது.