இஸ்ரேல் முழுவதும் திங்கட்கிழமை அதிகாலையில் இரான் சரமாரியாக ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது. சமீபத்திய மோதலில் இதுவரை நிகழ்ந்த தாக்குதலில் இது பெரிதாக இருக்கலாம் என, ஜெருசலேமில் உள்ள பிபிசியின் மத்திய கிழக்கு பிராந்திய பிரிவுக்கு தலைமை வகிக்கும் ஜோ ஃப்ளோட்டோ தெரிவிக்கிறார்.
இஸ்ரேலின் முக்கிய நகரமான டெல் அவிவ் மற்றும் துறைமுக நகரமான ஹைஃபா ஆகியவற்றில் நடைபெற்ற தாக்குதல்களில் 30க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். ஹைஃபா நகரில் இந்த தாக்குதலால் குடியிருப்பு கட்டடமும் கார்களும் சேதமடைந்ததாக இஸ்ரேலின் அவசர சேவையான மேகன் டேவிட் அடோம் தெரிவித்துள்ளது.
இஸ்ரேலில் இரான் நடத்திய தாக்குதலின் விளைவுகளை காட்டும் படங்கள்:


Post a Comment
Post a Comment