இஸ்ரேலும் இரானும் முழுமையான சண்டை நிறுத்தத்துக்கு ஒப்புக் கொண்டிருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். இஸ்ரேலும் இரானும் கிட்டத்தட்ட ஒரே நேரத்தில் தன்னிடம் வந்து, 'சமாதானம்' வேண்டி நின்றதாக அவர் கூறியுள்ளார்.
அதேநேரத்தில், இரான் அரசுத் தொலைக்காட்சியோ, சண்டை நிறுத்தத்துக்காக டிரம்ப் தங்களிடம் கெஞ்சியதாக கூறியுள்ளது.
எந்தவொரு சண்டை நிறுத்தம் அல்லது இராணுவ நடவடிக்கைகளை நிறுத்துவது குறித்து எந்த "ஒப்பந்தமும்" இல்லை என்று கூறியுள்ள இரான் வெளியுறவு அமைச்சர் சையத் அப்பாஸ், இஸ்ரேல் தாக்குதல்களை நிறுத்தினால், 'எங்களுக்கு பதிலடி கொடுக்கும் திட்டம் இல்லை' என்று தெரிவித்துள்ளார்.
சண்டை நிறுத்தம் எட்டப்பட்டுள்ளதா என்று இஸ்ரேலும் இரானும் இன்னும் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தவில்லை. மத்திய கிழக்கில் என்ன நடக்கிறது? சண்டை நிறுத்தத்துக்கு முதலில் அழைத்தது யார்?


Post a Comment
Post a Comment