#Rep/SanjeevanThuraiNaayakam.
முச்சக்கரவண்டி பாலத்தில் மோதி விபத்து
-------------------------------------------------------------------------
திருகோணமலை -ஈச்சிலம்பற்று பொலிஸ் பிரிவிலுள்ள இலங்கைத்துறை முகத்துவாரம் பகுதியில் முச்சக்கர வண்டி விபத்துக்குள்ளானதில் முச்சக்கர வண்டி சாரதி படுகாயமடைந்துள்ளார்.
இச்சம்பவம் இன்று ஞாயிற்றுக்கிழமை (29) காலை இடம்பெற்றுள்ளது.
தோப்பூரில் இருந்து வெருகல் நோக்கி முச்சக்கர வண்டியில் வியாபாரத்திற்காக பென்சி பொருட்களை ஏற்றிச் சென்ற போது முச்சக்கர வண்டி இலங்கைத்துறை முகத்துவாரம் பாலத்தில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இதில் முச்சக்கர வண்டி சாரதியான தோப்பூரைச் சேரர்ந்த அமீர் முஹமட் அஜ்மீர் (வயது 35) என்பவரே படுகாயமடைந்து ஈச்சிலம்பற்று பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைகளுக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை ஈச்சிலம்பற்று பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.


Post a Comment
Post a Comment