( வி.ரி .சகாதேவராஜா)
கல்முனை மாமாங்க வித்தியாலய ஆசிரியை
திருமதி.இந்திரசோதி அருள்ஞானமூர்த்தி தனது 37வருடகால ஆசிரியர் சேவையிலிருந்து நேற்று ஓய்வு பெற்றார்.
அவரின் ஆசிரிய சேவை நிறைவையொட்டி ஸ்ரீ மாமாங்க வித்தியாலயத்தில் பிரியாவிடை வைபவம் அதிபர் எஸ்.புவனேந்திரன் தலைமையில் இன்று 19.06.2025 வியாழக்கிழமை இடம்பெற்றது.
இவர் ஆசிரியராக 1988ம் ஆண்டு திகோ/அருணோதயா வித்தியாலயத்தில் முதல் கடமையை ஆரம்பித்ததோடு சேவைக்கால நிறைவு காலத்தை அண்மித்த வருடங்களில் கமு/கமு/உவெஸ்லி உயர்தர பாடசாலையின் சிரேஷ்ட ஆங்கில ஆசிரியையாகவும் பின்னர் இறுதியாக கமு/கமு ஸ்ரீ மாமாங்க வித்தியாலயத்தின் பிரதி அதிபராகவும் அதிபராகவும் கடமையாற்றி தனது 37 வருட ஆசிரிய சேவையில் இருந்து 09.06.2025 ஓய்வுபெற்றார்.
இந் நிகழ்வில் அவரது மகன் இலங்கை தமிழரசுக் கட்சியின் வாலிப முன்னணி செயலாளரும் கல்முனை தொகுதி அமைப்பாளருமான சட்டத்தரணி அருள்.நிதான்சனும் கலந்து சிறப்பித்தார்.


Post a Comment
Post a Comment