சம்மாந்துறை பிரதேச சபையினரே, உங்கள் கவனத்திற்கு



 


பேருந்து நிறுத்தம் நிலையத்தில் கூரை முற்றாக சேதம்!


சம்மாந்துறை தில்சாத் பர்வீஸ் 


அம்பாறை சம்மாந்துறை பிரதேச சபைக்கு உட்பட்ட ஆண்டியடி சந்தியில் காணப்படும் பேருந்து நிறுத்தம் இடத்தின் கூரை முற்றாக சேதமடைந்து காணப்படுகிறது.


அன்றாடம் தமது அடிப்படை தேவைகளுக்காக இந்த பேருந்து நிறுத்தம் இடத்தில் இருந்து அதிகளவான பாடசாலை மாணவர்கள், அரச உத்தியோகத்தர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் இவ்விடத்தினை பயன்படுத்துவதில் பாரிய சவால் ஏற்பட்டுள்ளது. 


பாடசாலை மாணவர்கள், அரச உத்தியோகத்தர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் பேருந்து வரும் வரை காத்திருக்கும் வேளைகளில் காகங்கள் மற்றும் இதர பறவைகளின் எச்சங்கள் அவர்களின் மேல் விழுகிறது இதனால் உரிய நேரத்திற்கு தேவைகளை நிறைவேற்றுவதில் பாரிய சவால் நிலவுகிறது மாத்திரம் இன்றி கால்நடைகளும் இவ்விடத்தினை சேதப்படுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


இதனால் பொதுமக்கள் பேருந்து நிறுத்தம் இடத்தில் இருந்து பயணம் மேற்கொள்ளுவதில் கடும் சவால்களுக்கு முகம் கொடுத்துள்ளனர்.


தற்போது அதிக வெயில் காலம் என்பதனால் இதன் கூரைப்பகுதி முற்றாக சேதமடைந்து இவ்வாறு காட்சியளிக்கிறது .


எனவே உரிய அதிகாரிகள் இக்கூரையினை புணரமைப்பு செய்து தருமாறு பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.