புதிய சீருடை அறிமுக நிகழ்வு.!



 



நூருல் ஹுதா உமர்


சாய்ந்தமருது மியன்டாட் விளையாட்டு கழகத்தின் புதிய சீருடை அறிமுக நிகழ்வு மற்றும் கிரிக்கெட் போட்டி என்பன நேற்று வியாழக்கிழமை (26) சாய்ந்தமருது பொது விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.

சாய்ந்தமருது மியன்டாட் விளையாட்டு கழகம், சாய்ந்தமருது சேலஞ்சர்ஸ் விளையாட்டு கழகம் என்பவற்றுக்கு இடையிலான போட்டியில் மியன்டாட் கழகம் 26 ஓட்டங்களினால் வெற்றி பெற்று சம்பியனாக தெரிவு செய்யப்பட்டது.

இப் போட்டியின் ஆட்ட நாயகனாக அரை சதத்தை பூர்த்தி செய்து ஒரு விக்கெட்டை வீழ்த்தி அணியின் வெற்றிக்கு காரணமாக இருந்த மியன்டாட் அணித் தலைவர் பீ.எம். ரிபான் தெரிவு செய்யப்பட்டார்.

இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக மியன்டாட் விளையாட்டு கழகத்தின் முகாமைத்துவ சபை உறுப்பினரும் பொறியியலாளரும் Damac Properties Co. LLC நிறுவனத்தின் பிரதி முகாமையாளருமான எம்.எல். நவாஸ் கலந்து கொண்டார். கௌரவ அதிதிகளாக மியன்டாட் கழகத்தின் தவிசாளர் எம்.ஜே.எம். காலித், தலைவர் யூ.எல்.எம். பாஹீம் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.

விசேட அதிதியாக மியன்டாட் கழகத்தின் முகாமைத்துவ சபை உறுப்பினரும் சாய்ந்தமருது ரியாலுல் ஜன்னா வித்தியாலய அதிபருமான எம்.ஏ. அஸ்தர் கலந்து சிறப்பித்தார். மேலும், அதிதிகளாக மியன்டாட் கழகத்தின் செயலாளர் யூ.கே. ஜவாஜிர் பிரதி தலைவர் ஏ.எம். ஜஹான் முகாமைத்துவ சபை உறுப்பினர்களான எம்.ஏ.ஜனுசர், ஏ.எல்.எம். நியாஸ், ஏ.ஏ.ஹலீம், யூ.கே.எம். அஸ்மீர், கே. பஷீர், யூ.எல். பரீட், ஏ. ஆரீஸ், ஏ.எல்.எம். அலிஸாதிக் மற்றும் சேலஞ்சர்ஸ் விளையாட்டு கழகத்தின் பிரதிச் செயலாளர் ஐ.எல்.எம். நாஸிம் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.