நூருல் ஹுதா உமர்
சாய்ந்தமருது தொழில் வழிகாட்டல் நிலையத்தின் (CGC) ஏற்பாட்டில் அரசாங்க உயர் சேவைகளுக்கான போட்டிப் பரீட்சைகள் தொடர்பான விழிப்பூட்டல் நிகழ்வும், இம்முறை இலங்கை நிர்வாக சேவைக்கு தெரிவு செய்யப்பட்ட ஏ.அப்றோஸ் அகமட் அவர்களை பாராட்டும் நிகழ்வும் சாய்ந்தமருது தனியார் மண்டபத்தில் (28) சனிக்கிழமை இடம்பெற்றது.
சாய்ந்தமருது தொழில் வழிகாட்டல் நிலையத்தின் பணிப்பாளர்களான சட்டத்தரணி எம்.ஐ.எம். றிஸ்வான், ரீ.எம்.எம். ஹப்றத், எல்.நாசர், ஏ.எம். தெளபீக் ஆகியோரின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் அதிதிகளாக அமைச்சுக்களின் மேலதிக செயலாளரும், முன்னாள் சாய்ந்தமருது பிரதேச செயலாளருமான ஏ.எல்.எம். சலீம் , தென்கிழக்கு பல்கலைக்கழக முன்னாள் உப வேந்தர் பேராசிரியர் ரமீஸ் அபூபக்கர், சாய்ந்தமருது ஜூம்மா பள்ளிவாசல் தலைவர் டாக்டர் எம்.கே. சனூஸ் காரியப்பர் , தென்கிழக்கு பல்கலைக்கழக பொறியியல் பீட விரிவுரையாளர் கலாநிதி அஸ்லம் சஜா, பொறியலாளர் கமால் நிஷாத் , சாய்ந்தமருது சமுர்த்தி தலைமைப் பீட முகாமையாளர் ஏ.சி.எம். நஜீம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
மேலும் சாய்ந்தமருது மாளிகைக்காட்டை சேர்ந்த பல்கலைக்கழக மாணவர்கள், பட்டதாரிகளும் இவ் விழிப்புணர்வு நிகழ்வில் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.
கலந்து கொண்ட அதிதிகளால் குறித்த உயர் தொழில்களின் சமூகம் சார்ந்த முக்கியத்துவங்கள் பட்டதாரிகளுக்கு எடுத்துரைக்கப்பட்டன. மேலும் சாய்ந்தமருது தொழில் வழிகாட்டல் நிலையமானது கடந்த 2016 ஆம் ஆண்டு தொடக்கம் பல்வேறு கல்வி சார்ந்த நிகழ்ச்சி திட்டங்களை நடாத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
.jpg)

Post a Comment
Post a Comment