முஹர்ரம் நிகழ்வுகள்



 


நூருல் ஹுதா உமர்


கல்வி அமைச்சின் சுற்றுநிருபத்துக்கு அமைய இஸ்லாமிய புது வருடம் ஹிஜ்ரி 1447 இணை சிறப்பிக்கும் வகையில் கல்முனை  கல்வி வலய சாய்ந்தமருது கமு/கமு/ அல்-ஜலால் வித்தியாலத்தின் முஹர்ரம் விழா ஹிஜ்ரி 1447 பிறை 1 அன்று வெகு விமர்சையாக நடாத்தப்பட்டது.

பாடசாலை அதிபர் டீ.கே.எம். சிராஜ் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் சாய்ந்தமருது கோட்டக்கல்வி பணிப்பாளர் திருமதி. ஏ.அஸ்மா மலீக் அவர்களும் விசேட அதிதியாக கல்முனை கல்வி வலய இஸ்லாம் பாடத்திற்கான ஆசிரிய ஆலோசகர் மௌலவி றிபாய்தீன் அவர்களும் கலந்து கொண்டதுடன், பாடசாலையின் இஸ்லாம் பாட ஆசிரியர் மௌலவி எம்.ஏ.எம். அறூஸ் அவர்களால் முஹர்ரம் சிந்தனை சொற்பொழிவாற்றப்பட்டது.

மேலும் இந்நிகழ்வில் முஹர்ரம் ஹிஜ்ரி 1447 இனை சிறப்பிக்கும் வகையில் பாடசாலை மாணவர்களுக்கிடையிலான கிராஅத் போட்டி நடத்தப்பட்டு வெற்றியீட்டிய மாணவர்களுக்கு சான்றிதழ்களும் பரிசில்களும் இதன்போது வழங்கி வைக்கப்பட்டது.

இன்றைய முஹர்ரம் 01 ஹிஜ்ரி 1447 இணை சிறப்பிக்கும் வகையில் இணைப்பாடவிதானத்துக்கு பொறுப்பான உதவி அதிபர் எம்.பி.எம். பௌஸான் அவர்களின் எண்ணக்கருவில் இஸ்லாமிய கலண்டர் ஒன்றை மாணவர்கள் தினம் தினம் அவதானிக்கும் வகையில் காட்சிப்படுத்தி திரை நீக்கம் செய்யப்பட்டது விசேட அம்சமாகும்.

மேலும் இந்நிகழ்வில் மேற்பார்வைக் கடமைக்காக சமூகமளித்த மாகாணக் கல்வித் திணைக்களத்தின் பிரதிக் கல்விப் பணிப்பாளர் என்.எம்.ஏ. மலீக், மாகாண கல்வி அமைச்சின் யுனிசெப் இணைப்பாளர் நிஹால், பாடசாலை EPSI இணைப்பாளர் மௌலவி ஜஹாங்கீர், ஆரம்பப் பிரிவு ஆசிரிய ஆலோசகர் அன்சார், பாடசாலை பிரதி அதிபர், உதவி அதிபர்கள், பகுதித் தலைவர்கள், ஆசிரியர்கள், கல்விசாரா ஊழியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டிருந்தனர்.