விபத்தில் சிக்கி சிகிச்சை பலனின்றி உயிரிழந்த கோட்டைக்கல்லாற்றைச் சேர்ந்த மருத்துவத்துறை மாணவன் டர்சாந்.
மட்டக்களப்பு கோட்டைக்கல்லாற்றைச் சேர்ந்த மட்/ கோட்டைக்கல்லாறு மகா வித்தியாலயத்தின் பழைய மாணவரான கனகராசா டர்சாந் அவர்கள் ரஸ்யா நாட்டில் தனது மருத்துவக் கல்வியை தொடர்ந்து வந்த நிலையில் சில தினங்களுக்கு முன் நாடு திரும்பிய நிலையில் மட்டக்களப்பு பெரியகல்லாறு வைத்தியசாலையில் பயிற்சி வைத்தியராக இணைந்து கொண்டு கடமை புரிந்து வந்த நிலையில் கடமை நிமிர்த்தம் வைத்தியசாலைக்குச் செல்லும் வழியிலேயே பெரியகல்லாறு பாலத்தில் வைத்து விபத்துக்குள்ளாகி படுகாயமடைந்தார்.
படுகாயத்துக்குள்ளான மருத்துவ மாணவன் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் சிகிச்சைபலனின்றி நேற்றைய தினம் உயிரிழந்துள்ளார்.


Post a Comment
Post a Comment