சுட்டுக் கொல்லப்பட்ட இரண்டு இளைஞர்களின் சடலங்கள் மீட்பு



 



மித்தெனிய தொரகொலயா பகுதியில் துப்பாக்கியால் சுட்டு கொல்லப்பட்ட இரண்டு இளைஞர்களின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. 


25 மற்றும் 30 வயதிக்கு இடைப்பட்ட இருவரே இவ்வாறு கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

துப்பாக்கிச் சூடு இன்று (25) காலை இடம்பெற்றுள்ளதுடன், தற்போது மூன்று விசேட விசாரணைக் குழுக்கள், மித்தெனிய பொலிஸாருடன் இணைந்து விசாரணைகளைத் தொடங்கியுள்ளன. 

இந்த துப்பாக்கிச் சூட்டுக்கான காரணம் இதுவரை அறியப்படவில்லை