ஈரானின் தரைவழிமார்க்கங்களைத் திறக்க முடிவு



  


ஈரானிய அரசாங்கம்  தரைவழியதாக எல்லை கடக்கும் அனைத்து  வழிகளையும் திறக்க முடிவு செய்துள்ளது.

 

அதன்படி, ஈரானில் வசிக்கும் வெளிநாட்டினர் நாட்டை விட்டு வெளியேற முடியும்.

 

 ஈரானின் அனைத்து எல்லைகளும் பயணிகள் மற்றும் பொருட்களைக் கொண்டு செல்வதற்காக திறந்திருக்கும்,என்பதோடு  மேலும் விமான சேவைகள் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

பாகிஸ்தானியர்கள், சீனர்கள் மற்றும் தென் கொரியர்கள் உள்ளிட்ட வெளிநாட்டினர் ஏற்கனவே  தரை வழிகளைப் பயன்படுத்தி நாட்டை விட்டு வெளியேற முயற்சித்து வருகின்றனர்.

 

இதற்கிடையில், சீனா தனது குடிமக்களை ஈரானில் இருந்து வெளியேற்றத் தொடங்கியுள்ளதாகக் கூறுகிறது.

 

அதன்படி, சீன நாட்டினரின் முதல் குழு நேற்று  (17) தெஹ்ரானில் இருந்து தரைவழியாக துர்க்மெனிஸ்தானுக்கு புறப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.