தாமரைக்குளம் சீரடி சாயி கருணாலயத்தில் கதிர்காமபாதயாத்திரைக்களுக்கான சேவைகள் முன்னெடுப்பு ....
ஜே.கே.யதுர்ஷன்
தம்பிலுவில்...
கிழக்கிலங்கையில் பெரிய ஷீரடி என்று மக்களால் போற்றப்பட்டுவரும் அம்பாறை மாவட்டம் தாமரைக்குளம் ஷீரடி சாயி கருணாலயத்தின் வருடாந்த கதிர்காம பாத யாத்திரையர்களூக்கான சேவைகள் இவ்வருடமும் ஆலய ஸ்தாபகரும் இலங்கையில் மட்டும் இன்றி இந்தியாமற்றும் பல நாடுகளில் தனது சமுக மக்கள் சேவைகளை வழங்கும் சமுக செயற்பாட்டாளர் திருமதி சீதா விவேக் அவர்களின் தலைமையில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது....
மேலும் குறித்த சேவை ஓட்டி இலங்கையில் வட மகாணத்திலும் மற்றய பாகங்களில் இருந்து வரும் யாத்திரையர்கள் தங்கி இருந்து அவர்களின் களைப்பை போக்கி உணவருத்தி மற்றும் நீராடி அவர்களின் கடமைகளை முடித்தும் செல்லுவதற்கு அமைவாக ஷீரடி சாயி கருணாலயத்தின் சேவைகள் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது....
அத்துடன் ஷீரடி சாயி கருணாலயத்தின் செயலாளரும் சமுகசெயற்பாட்டாளருமான ஜே.கே.யதுர்ஷன் அவர்களின் வேண்டு கோளுக்கு இணங்க திருக்கோவில் காஞ்சிரன் குடா இராணுவத்தினர் அவர்களின் கட்டளை அதிகாரி மற்றும் அம்பாறை மாவட்ட சிவதொண்டர் அமைப்பின் ஊடாக தினசரி குடிநீர் மற்றும் சாதாரண நீர்கள் வழங்கும் சேவையும் ஆலயத்தில் இடம்பெற்று வருவது குறிப்பிடத்தக்கது....
இது வரை ஷீரடி சாயி கருணாலயத்தில் 300க்கும் மேற்பட்ட யாத்திரையர்கள் வருகை தந்து சேவைகளை பெற்று கதிர்காமம் நோக்கிய யாத்திரையை தொடங்கியுள்ளது மேலும் குறிப்பிடத்தக்கவிடயமாகும்....


Post a Comment
Post a Comment